.
 
 

சலங்கை பரதவிழா 2015
பத்திரிகைச் செய்தி
22-02-2015

மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதர தொழில் மேம்பாட்டுத் திட்டத்தை முன்னிட்டு பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் 15வது தடவையாக நடாத்திய சலங்கை பரதவிழா 22.02.2015 புளோ மெனில் நகரசபை மண்டபத்தில், அரங்கம் நிறைந்த மக்களோடு நடைபெற்றது.

இந்நிகழ்வு பிற்பகல் 15.30 மணிக்கு அரங்க வரவேற்பு நிறைகுட விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது. வரவேற்பு நிறைகுட விளக்கை திரு.திருமதி. சுஜீவன் விமலா அவர்கள் ஏற்றிவைத்தனர்.

பொதுச்சுடரை பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணிப்பாளர் திரு. சுந்தரவேல் அவர்கள் ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து தாயக விடுதலைக்காக போராடி வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கும் போரினாலும் இயற்கை அனர்த்தத்தாலும் சாவடைந்த மக்களையும் நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

mரங்க மங்கள விளக்கினை புளோ மெனில் நகரபிதா திரு. தியேரி மெங்கோன், உதவிநகரபிதா திருமதி. கிறிஸ்தின் கொமேராஸ், சென் செந்தெனிஸ் மாகாண அவைத் தலைவர் திரு . ஸ்ரிபன் துரூசல், ரான்சி நகரசபை உறுப்பினர் திரு. அலன் ஆனந்தன், நாடுகடந்த தமிழீழ அரசு பாராளுமன்ற உறுப்பினர் திரு. பாலச்சந்திரன், பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழக தலைவர் திரு. கோணேஸ்வரன், புளோமினல் நகரசபை உறுப்பினர்களான கிறிஸ்ரின் செரிகோன், பிறீயித் லுமார்சோன், பற்றிசியா பூர் ஆகியோருடன் செல்வி ஸ்தெபானி சுரேந்திரன் இணைந்து ஏற்றிவைத்தனர்.

வரவேற்புரையை திருமதி சுபா குருபரன் அவர்கள் நிகழ்த்தினார் அதைத்தொடர்ந்து பிரான்சின் முன்னனி நடன ஆசிரியர்களின் 250க்கு மேற்பட்ட பரதநாட்டிய மாணவிகளின் 27 நடன நிகழ்வுகள் இடம்பெற்றது. மாணவர்களும் ஆசிரியர்களும் பதக்கமும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வு இரவு 10.00 மணிக்கு இனிதே நிறைவுற்றது.

இந்நிகழ்வின் பொது, புளோ மெனில் நகரசபை நூலகத்திற்கு, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் வரலாற்று நூல்கள் வழங்கப்பட்டது.

தமிழர் புனர்வாழ்வுக் கழக பிரான்ஸ் கௌரவ உறுப்பினர் திரு. விநாயகமூர்த்தி, கழக உறுப்பினர் திரு. அருள்மொழித்தேவன் மற்றும் ஸ்தெபானி சுரேந்திரன் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். இந்நிகழ்விற்கு அருள்சோனோ, பேபி பலூன், போட்டோ மணி, 5டி எனடர்டெய்மென்ட் வீடியோ குழுவினர், தீபன் போட்டோ குழுவினர் மற்றும் வர்த்தக ஸ்தாபனத்தினர், கழக உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் உறுதுணை வழங்கினர்.

ஒன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ்

 

 
 
English