.
 
 

தென் தமிழீழ மக்களுக்கான சிறப்பு வேண்டுகை
11.01.2011

அன்பார்ந்த

மக்கேள தென் தமிழீழ மக்களுக்கான சிறப்பு வேண்டுகை

தென் தமிழீழத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் அடை மமைழயின் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கை நான்கு இலட்சத்தையும் தாண்டியுள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்காலிக வீடுகள், மண் வீடுகள் முற்றாக சேதமுற்றுள்ளன உணவு, குடி நீர் ஆகியவற்றிற்கு வசதியின்றி 190 நலன்சார் நிலையங்களில் மக்கள் தங்கியுள்ளனர்.

மட்டக்களப்பு

இன்று எடுக்கப்பட்ட கணக்கின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் 86035 குடும்பங்கைளச் சேர்ந்த 3 இலட்சத்து 22 ஆயிரத்து 743 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 14 ஆயிரத்து 549 குடும்பங்கைளச் சேர்ந்த 55 ஆயிரத்து 345 பேர் 185 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுளனர். ஏiனேயார் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவுப் பாலம், பனிச்சங்கேணி பாலத்தினூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கிரான் பிரதேசத்திலிருந்து வாலிபாய்ந்த கல் பிரதேசத்துக்கான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவு, வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுகளில் பல கிராமங்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இங்கு படகு மூலம் போக்குவரத்து செய்வதுகூட கஷ்டமான காரியமாக மாறியுள்ளது. வாவி நீர் பல கிராமங்களுக்குள் புகுந்துள்ளதால் வாவியையும் குளங்களையும் அண்டிய கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அம்பாறை
இன்றைய கணக்கெடுப்பின்படி அம்பாற மாவட்டத்தில் 13 ஆயிரத்து 724 குடும்பங்கைளச் சேர்ந்த 53 ஆயிரத்து 240 குடும்பங்கள் சுமார் 45 நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர்.

இன்று இரவு (11,1,2011) அம்பாறை சாகமம் குளம் உடைப்பு எடுத்துள்ளது. இதனால் கழிமண்ணினாலான வீடுகள் முற்றாக அடித்து செல்லப்பட்டுள்ளன.
ஆலையடி வேம்பு பிரதேச சபை, திருக்கோவில் ஆகிய பிரதேசங்களில் மக்கள் அனைவரும் வெளியேறி வினாயகர் வித்தியாலயம், கலைமகள் வித்தியாலயம், பொதுநாவலர் பாடசாலை ஆர்.கே.எம் ஆகிய இடங்களில் தங்கியுள்ளனர். மட்டக்களப்பு - அக்கரைப்பற்று வீதி முற்றாக தடைப்பட்டுள்ளது.

உதவிகள் இல்லை, வழங்கும் உதவிகளிலும் பாகுபாடு

பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள போதிலும் இவர்களுக்கான சமைத்த உணவு மற்றும் உலர் உணவு வழங்கும் நடைமுறை இல்லை. போதியளவு சமைத்த உணவு மற்றும் நிவாரணங்கள் வழங்கப்படாமையினால் மக்கள் பெரும் அவலத்தினை சந்தித்து வருகின்றனர்.

அரசாங்கமோ அரச சார்பற்ற நிறுவனங்களோ இதுவரை பெரிதாக எதனையும் செய்யவில்லை. இதனைவிட நிவாரண விநியோகத்திலும் சிறுபான்மை பெரும்பான்மை என பாகுபாடு காட்டப்படுகின்றது. அரச சார்பற்ற நிறுவனங்களும் தம்மிடம் அனர்த்த நிவாரணத்திற்கு நிதி இல்லையென கைவிரித்துள்ளன. சிவில் நிர்வாக அதிகாரிகள் தொடர்பில் இல்லை. கிராம சேவகர்கள் மற்றும் சில அதிகாரிகளும் இடம் பெயர்ந்துள்ளமையே இதற்கு காரணம். சில பள்ளிவாசல்கள் முஸ்லிம் அரசியல் வாதிகள் தமிழ் பிரதேசங்களில் மட்டும் நிவாரணப்பணிகைள செய்கின்றனர்.

புலம்பெயர் மக்கள்தான் உதவ வேண்டும். மேற்கூறப்பட்ட நிலையில் புலம்பெயர்ந்த மக்கள் அனைவரும் தம்மாலான உதவிகளை தென் தமிழீழ மக்களுக்கு செய்யுமாறு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் சார்பாக கேட்டுக்கொள்கின்றேன். உங்களுக்கு அறிந்தவர்கள், நம்பிக்கையானவர்கள் ஊடாக தொடர்பு கொண்டு உதவிகைள செய்யுங்கள். உதவி செய்யும் உள்ளுர் அமைப்புக்களின் விபரங்கள், தொண்டர்களின் விபரங்கள் யாருக்கும் தேவை எனின் உங்கள் நாட்டு புனர்வாழ்வுக் கழக அலுவலகத்திடம் விபரங்கைள பெற்றுக்கொள்ள முடியும்.

இப்படிக்கு கே.பி.றெஜி
11.01.2011
regi.itro@gmail.com

 
 
English