தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - பிரான்ஸ்
முதற்பக்கம்
செய்திகள்
வெண்புறா
HDU
செயற்பாடுகள்
திட்டங்கள்
காப்பகம்
அறிக்கை
கட்டுரை
நேர்காணல்
காணொளிப்படம்
நிழற்படம்
எம்மைப்பற்றி
தொடர்புக்கு
எமது முகவரி
ORT France,
84 ,rue philippe de Girad,
75018 Paris, France.
Tél: 01 40 38 30 74
trofr@hotmail.com

உதவிசெய்ய

Par virement bancaire
Banque : Credit Lyonnais
63bis rue Daurémont
75018 Paris
Code Banque - 30002
Code Guichet - 00408
N° Compte - 0000005584F
Clé RIB - 10

 
 
 

17வது தமிழர் விளையாட்டு விழா
பத்திரிகைச் செய்தி
07.07.2014

தமிழர் புனாழ்வாழ்வுக் கழகம் பிரான்ஸ், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் இணைந்து நடாத்திய 17வது தமிழர் விளையாட்டு விழா 06-07-2014 ஞாயிறு காலை 10 மணிக்கு லு பூர்ஜே மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது.

தாயக விடுதலைக்காக தமது இனிய உயிரை அற்பணித்த மாவீரர்கள், போரினால் கொல்லப்பட்ட மக்களின் நினைவாக 2009 வடிவமைக்கப்பட்ட நினைவுத் தூவி முன்பாக பிரதான பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

பிரதான பொதுச்சுடரினை பிரான்ஸ் தேசிய செயற்பாட்டாளர் திரு. . பாலசிங்கம் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து தாயக விடுதலைக்காக போராடி வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கும், போரினாலும் இயற்கை அனர்த்தங்களாலும் சாவடைந்த மக்களையும் நினைவு கூர்ந்து அக வணக்கம் செலுத்தப்பட்டது.

சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த திருமதி. மரி ஜோர்ஜ் பூவே, டுனி நகர மன்ற உறுப்பினர் திரு. மிசல் தெல் பிளஸ், நாடுகடந்த அரசப் பிரதநிதிகள், தமிழர் புனர்வாழ்வுக் கழக செயற்பாட்டாளர்கள், தமிழ்ச்சங்கப் பிரதிநிதிகள், தமிழ்ச் தேசிய செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் வருகை தந்த மக்கள் அனைவரும் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூவி முன்பாக மலர் வணக்கம் செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து நந்தகோபன் குழுவினரின் தவில் நாதஸ்வர இசை முழங்க அனைவரும் மைதானத்தின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பம் வரை அழைத்து வரப்பட்டனர்

பிரான்ஸ் நாட்டு தேசியக் கொடியினை உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் பிரான்ஸ் தலைவரும், ரான்சி நகரமன்ற உறுப்பினருமான திரு. அலன் ஆனந்தன் ஏற்றிவைத்தார். தமிழர் புனர்வாழ்வுக் கழகக் கொடியினை, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கௌரவ உறுப்பினர் திரு. தம்பையா விநாயகமூர்த்தி அவர்கள் ஏற்றி வைத்தார். ஐரோப்பிய ஒன்றியக் கொடியினை பிரான்ஸ் நாட்டின் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரும், கமினியுஸ் சட்சியின் முன்னாள் தலைவியும் தற்போதய பாராளுமன்ற உறுப்பினருமான திருமதி. மரிஜோர் புவே அவர்கள் ஏற்றி வைத்தார்.

தமிழர்களின் பண்பாட்டோடு இணைந்த மங்கள விளக்கினை துனி நகரமன்ற உறுப்பினர் திரு. மிசல் தெல் பிளஸ், புளோ மெனில் நகரமன்ற உறுப்பினர் செல்வி ஸ்ரெபனி சுரேந்திரன், நாடுகடந்த தமிழீழ அரசுப் பிரதிநிதி திரு. பாலச்சந்திரன், தமிழர் புனர்வாழ்வுக் கழக பிரான்ஸ் தலைவர் திரு. கோணேஸ்வரன், எல்லைகள் அற்ற தமிழர் அமைப்பு பிரதிநிதி திரு. அரியரட்ணம், பிரான்ஸ் கலைஞர்கள் சர்பாக திரு. வல்லிபுரம் ஆகியோர் எற்றி வைத்தனர்.

கிராமிய எழுச்சிப் பாடகர் மைலையூர் திரு. இந்திரன் அவர்கள் தமிழிசைப் பாடலைப் பாடி விழாவை வாழ்த்தினார். ரான்சி நகரமன்ற உறுப்பினர் திரு. அலன் ஆனந்தன் பொன்னாடை போத்து இவரை கௌரவித்தார்.

தமிழர் புனர்வாழ்வுக் கழக பிரான்ஸ் பணிப்பாளர் திரு. சுந்தரவேல், திருமதி. மரி ஜோர்ஜ் புவேயை பொண்ணாடை போத்தி கௌரவித்தார், துனி நகரமன்ற உறுப்பினரை .பு. பிரான்ஸ் கௌரவ உறுப்பினர் திரு. விநாயகமூர்த்தி அவர்கள் கௌரவித்தார். ரான்சி நகர மன்ற உறுப்பினர் திரு. அலன் ஆனந்தன்னை, .பு. பிரான்ஸ் கௌரவ உறுப்பினர் திரு. ஜெயசூரியர் கௌரவித்தார்.

அதனைத் தொடர்ந்து விளையாட்டு விழாவிற்கான விளையாட்டுக்கள் ஆரம்பமாகியது.

ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனம், துடுப்பெடுத்தாட்டச்;சம்மேளனம் தமிழர் விளையாட்டு விழா 2014க்கு உரிய சுற்றுப்போட்டிகளை 20.04.2014 நடாத்தி முடித்து உறுதுணை வழங்கியது. அன்றைய தினம் 13 மற்றும் 15 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான உதைபந்தாட்ட போட்டியில், இறுதிப்போட்டிக்கு தெரிவாகிய நல்லூர் ஸ்தான் மற்றும் தமிழர் விளையாட்டுக் கழகம் 93 அணிகள் 06.07.2014 சமூகமளிக்காமையினால், இரண்டு பிரிவுகளிலும் பாடுமீன் விளையாட்டுக் கழக அணிகளுக்கு வெற்றியளிக்கப்பட்டது. அதே போல் பெண்கள் அணிக்கான இறுதிப்போட்டிக்கு தெரிவான நல்லூர் ஸ்தான் அணி சமூகமளிக்காமையால், ஈழவர் அணிக்கு வெற்றியளிக்கப்பட்டதோடு, சமூகமளித்த அணிகளுக்கிடையே தனித்தனி காட்சிப் போட்டிகள் நடைபெற்றது.

தமிழர் விளையாட்டு விழா 2014 உதைபந்தாட்ட போட்டியில் பிரான்ஸ் தமிழர் விளையாட்டுக்கழகங்களின் 29 குழுக்கள் பங்குபற்றின, 93 தமிழர் விளையாட்டுக்கழம் முதலாம்  இடத்தையும், ஈழவர் விளையாட்டுக்கழம் இரண்டாம் இடத்தையும், சென் பற்றிக்ஸ் விளையாட்டுக்கழம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.

துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப்போட்டியில் 16 விளையாட்டுக்கழகங்களின்  24 குழுக்கள்; பங்கு பற்றின, ஈஸ்ரன் விளையாட்டுக்கழகம் முதலாம்  இடத்தையும், யாழ்ட்டன் விளையாட்டுக்கழம் இரண்டாம் இடத்தையும், பாரிஸ் தமிழ் நட்சத்திரங்கள் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.

17அணிகள் கலந்துகொண்ட கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் ஈழம் றோயல் அணி முதலாம் இடத்தையும், லா கூர்நெவ் அணி இரண்டாம் இடத்தையும், சல்லி திருகோணமலை அணி மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.

10 அணிகள் கலந்துகொண்ட தாச்சிப்போட்டியில், செந்தோமஸ் அணி முதலாம் இடத்தையும், சிறீஅம்பாள் அணி இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.

6 அணிகள் கலந்துகொண்ட கயிறுழுத்தல் போட்டியில்  மில்லர் அணி முதலாம் இடத்தையும், சென் மேரீஸ் அணி இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.

அரங்க நிகழ்வாக ஜதீஸ்வரா இசைக் குழுவின் இன்னிசை கானங்கள், பார்வையாளர்கள் கலந்கொள்ளும் நீங்களும் பாடலாம் நிகழ்ச்சி இடம்பெற்றது. பிரான்சின் பிரபல நாடகக் கலைஞர்களின் நடிப்பில், திரு. பரா அவர்களின் நெறியாள்கையில் உறவுப் பாலம் நாடகமும் இடம்பெற்று மக்களது ஏகோபித்த கரகோசத்தையும் பாராட்டையும் பெற்றுக்கொண்டது.

சாக்கோட்டம், முட்டியுடைத்தல், கலையணைச் சண்டை, சங்கீதக் கதிரை, ஈருருளி மெது ஓட்டம், குறிபார்த்துச் சுடுதல் மற்றும் ஜனரஞ்சகப் போட்டிகளுடன் சிறுவர் விளையாட்டுக்களும் இடம்பெற்றது.

இவ்வாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக கராட்டி, பூப்பந்தாட்டம் மற்றும் சிறுவர்களுக்கான கேர்மெஸ் விளையாட்டுக்களும் இடம்பெற்றது.

கரம் சதுரங்கப் போட்டிகளில் பல இளைஞர்கள் கலந்துகொண்டனர். இப் போட்டிகளை தமிழர் சதுரங்க ஒன்றியம் பிரான்ஸ் உறுப்பினர்கள் நடாத்தி உறுதுணை வழங்கினர்;.

இவ்விழாவில் ஜேர்மன் மற்றும் லண்டன் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நாடு கடந்த தமிழீழ அரச பிரதிநிதிகள், தமிழர் புனர்வாழ்வுக் கழக செயற்பாட்டாளர்கள், துறை சார் விளையாட்டு செயற்பாட்டாளர்கள், வர்த்தக உரிமையாளர்கள் மற்றும் புளோ மெனில் நகரபிதா திரு. தியேரி மெங்கோன் (. வுhநைசசல ஆநபைநெn), புளோ மெனில் துணை நகரபிதா, லா கூர்நெவ் துணை நகரபிதா திரு. எரிக் மொரிஸ், மானகரசபை உறுப்பினர் திரு. அந்தோனி ரூசெல், கிராம முன்னேற்றச்சங் பிரதிநிதிகள், மற்றும் பல பிரமுகர்கள் வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வெற்றியாளர்களை உற்சாகப்படுத்தினர்.

வர்த்தக நிறுவனங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், வானொலிகள் தங்கள் விளம்பர காட்சி அறைகளை நிறுவி மக்களை கவர்ந்திழுத்தனர்.

இவாண்டிற்கான உள்நுழைவுச் சீட்டு நல்வாய்பில் 0206 என்ற இலக்கம் குலுக்கல் மூலம் தெரிவாகியது. இதற்கான உந்துருளியை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வழங்குகின்றது.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், தாயக மக்களின் நலன்களை மேம்படுத்துவதற்காக ஆண்டு தோறும் நடாத்தப்படும்; தமிழர் விளையாட்டு விழாவிற்கு இவ்வாண்டும், இணைந்துகொண்ட எமது மக்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தன்னலன் கருதாத தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தொண்டர்கள் மற்றம் சமூக ஆர்வலர்களின் அரிய சேவையினூடா முன்னெடுக்கப்பட்ட விழாவில் சிறுவர்கள், விருந்தினர்கள் உட்பட 5 000ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். விழா இரவு 10 மணிக்கு இனிதே நிறைவு பெற்றது.

ஒன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ்