தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - பிரான்ஸ்
முதற்பக்கம்
செய்திகள்
வெண்புறா
HDU
செயற்பாடுகள்
திட்டங்கள்
காப்பகம்
அறிக்கை
கட்டுரை
நேர்காணல்
காணொளிப்படம்
நிழற்படம்
எம்மைப்பற்றி
தொடர்புக்கு
எமது முகவரி
ORT France,
84 ,rue philippe de Girad,
75018 Paris, France.
Tél: 01 40 38 30 74
trofr@hotmail.com

உதவிசெய்ய

Par virement bancaire
Banque : Credit Lyonnais
63bis rue Daurémont
75018 Paris
Code Banque - 30002
Code Guichet - 00408
N° Compte - 0000005584F
Clé RIB - 10

 
 
 

பத்திரிகைச்செய்தி
21.06.2014

பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 17வது தமிழர் விளையாட்டு விழா

ஞாயிறன்று - பிரான்சில் 17வது தமிழர் விளையாட்டுவிழா:
ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகளாய்; ஒன்றுகூடும் பெருநிகழ்வு 06-07-2014
தயாராகுங்கள்!

பாரிசின் மிகப்பெரிய பூங்கா – மைதானமான லு புசே (Le Bourget) பூங்காவில் பல்லாயிரக்கணக்கில் தமிழ்மக்கள் ஒன்றுகூடி – ஒருதாய் பிள்ளைகளாய் முழு நாள் பொழுதைக்கழிக்கும் மாபெரும் தமிழர் விழா 17வது தடவையாக எதிர்வரும் 06.07.2014 ஞாயிறன்று நிகழவுள்ளது.

பிரான்ஸ் இளம் தமிழ் தலைமுறைக்கும், மூத்த தலைமுறைக்கும் இடையேயான பண்பாட்டு கைகோர்ப்பு

நிகழ்வில் இளையதலைமுறையினர் அறிந்திராத பாரம்பரிய தமிழர் விளையாட்டுக்களான கிளித்தட்டு, சங்கீதக்கதிரை, முட்டியுடைத்தல், தலையணைச்சண்டை, கயிறுழுத்தல் போன்ற விளையாட்டுக்களுடன், கரப்பந்தாட்டம், கரம், சதுரங்கம் இன்னும் பல வேடிக்கை வினோத விளையாட்டுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்வில் பல்வேறு தமிழர் சமூக அமைப்புக்களினதும், வர்த்தக நிவனங்களினதும் காட்சி அறைகளும் மைதானத்தில் அமைக்கப்படவுள்ளது. மைதானத்தில் விளம்பர வியாபார கடைகளை நிறுவ விரும்பும் வியாபார நிறுவனங்கள் எமது பணிமனையுடன் தொடர்பு கொள்ளுங்கள்

கரப்பந்தாட்டம், கிளித்தட்டு மற்றும் குழு விளையாட்டுக்களில் பங்குபற்ற விரும்புபவர்கள் மைதானத்தில் விளையாட்டுக்கான பணிமனையில் குழுக்களை பதிவு செய்து இணைந்து கொள்ளலாம்.

இசைநிகழ்வில் கலந்து கொண்டு பாட விரும்புவோர், மேற்கத்தேயநடனம் ஆடவிரும்புவோர், கலை நிகழ்ச்சிகளை வழங்க விரும்புவோர் எமது பணிமனையில், கலைப்பிரிவுடன் தொடர்பு கொள்ளவும்

விழா சிறப்பு மலர், துண்டுப்பிரசுரங்கள், பெரிய விளம்பர பிரசுரங்கள் ஆகியவற்றில் விளம்பர்கள் செய்ய விரும்புவோர் உடனடியாக எமது பணிமனையுடன் தொடர்பு கொள்ளவும்
கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக ஈழத்தில் இருந்து கேட்கும் அவலக்குரல்களுக்கு ஆதரவுக்கரம் கொடுக்கும் ஒரே நோக்குடன் அப் பாதையில் தனது பணியினைச் செவ்வனே செயற்படுத்தி அதன் மூலம் சர்வதேசங்களின் நன்மதிப்பையும் பாராட்டுக்களையும் பெற்று இன்றும் தனது சேவையைத் தொடர்ந்து கொண்டிருக்கும் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் கடந்த 16 வருடங்களாக தமிழர் விளையாட்டு விழா எனும் நிகழ்வை வருடாவருடம் சிறப்புற நடாத்துவதன் மூலம் தாயக உறவுகளை மனதில் நினைந்து பிரான்ஸ் வாழ் தமிழர்கள் அனைவரும் வருடத்தில் ஒரு முறை ஒன்றாக ஒன்று கூடவும் அதனுடாக அன்று கிடைக்கும் நிதியின் மூலம் தேவையான உதவிகளை தாயக உறவுகளுக்கு வழங்கும் நடவடிக்கையையும் செய்து வருகின்றது.
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் வெளிப்படையான கட்டமைப்பாகவும், பிரான்ஸ் அரசின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப செயற்படும் நிறுவனமாகவும், நிதி மற்றும் நிர்வாக விடயங்களில் பொறுப்புவாய்ந்த நிறுவனமாகவும், தமிழ்மக்களின் நலன்களிற்கும் - ஒற்றுமைக்கும் உதவிடும் நிறுவனமாகவும் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் தொடர்ந்தும் செயற்படு வருகின்றது.

பிரான்ஸ் தேசமெங்கும் சிதறிவாழும் எம்மவர்களை ஒரு தாய் பிள்ளைகளாய் ஒன்றிணைக்கும் நோக்கோடும், தாயக உறவுகளுக்கு உதவும் நோக்கோடும் தமிழர் விளையாட்டு விழாவினை தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ், தமிழ் மக்களின் நலனுக்காக செயற்படும் அனைத்து அமைப்புக்களின் ஆதரவோடும் கரம் பற்றி இவ் ஆண்டும் நடாத்தவுள்ளது

காலை 9.30 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகி தமிழர் பண்பாட்டு தவில் நாதஸ்வர இசை முளங்க, தமிழ் இனிய நடனத்துடன் சிறப்பு விருந்தினர்கள் அழைப்பு இடம்பெற்று கொடியேற்றலுடன் விளையாட்டுக்கள் ஆரம்பமாகும்
அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நன்றி
ஓன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் – பிரான்ஸ்
தொடர்புகட்கு: 01 40 38 30 74