தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - பிரான்ஸ்
முதற்பக்கம்
செய்திகள்
வெண்புறா
HDU
செயற்பாடுகள்
திட்டங்கள்
காப்பகம்
அறிக்கை
கட்டுரை
நேர்காணல்
காணொளிப்படம்
நிழற்படம்
எம்மைப்பற்றி
தொடர்புக்கு
எமது முகவரி
ORT France,
84 ,rue philippe de Girad,
75018 Paris, France.
Tél: 01 40 38 30 74
trofr@hotmail.com

உதவிசெய்ய

Par virement bancaire
Banque : Credit Lyonnais
63bis rue Daurémont
75018 Paris
Code Banque - 30002
Code Guichet - 00408
N° Compte - 0000005584F
Clé RIB - 10

 
 
 

பண்பாட்டிற்குப் பதியம் வைத்து நின்ற 
 16வது தமிழர் விளையாட்டுவிழா

தன்னார்வத் தொண்டு நிறுவனமாய்த் தனித்துவமாய் வளர்ந்து. சேவையின் சிகரமாய் விளங்கி நிற்கும் பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வருடந்தோறும் நடாத்தி வரும் தமிழர் பாண்பாட்டியல் தடயங்களில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வான தமிழர் விiளாயட்டுவிழாவானது கடந்த காலங்களைப் போன்று இவ்வருடமும் டுனி மாநகரத்தில் அமந்துள்ள 'லூபூ(ர்)ஜே' விமானத்தள திறந்தவெளி மைதானத்தில்  கடந்த ஞாயி;றுக்கிழமை (07.07.2013) வெகு சிறப்பாக நடைபெற்றது. 

மேற்படி நிகழ்வுக்காக முதல்நாளே மைதானத்தின் அனைத்துப் பகுதிகளும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு ஆங்காங்கே வரத்தக நிறுவனங்கள் ஊடகத்தறை சார்ந்த நிறுவனங்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என பலவகைப்பட்ட அமைப்புக்கள் சார்ந்த நிறுவனங்களுக்கான கொட்டகைகள் அமைக்கப்பட்டிருந்ததுடன் பலவகை விiயாட்டுக்கள் ஒரே நேரத்தில் சிறப்பாக நடைபெறும் வகையில் விளையாட்டுத் திடல்களும் அரங்கமைக்கப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாக அமைந்திருந்தது. மைதானத்தின் நுளைவாயில்தாண்டிய நடைபாதையை அலங்கரித்து நின்ற நினைவேந்தல் தூபியும் அதன் முன்னமைந்திருந்த பொதுச்சுடர் தாங்கியும் வெகு சிறப்பாகவும் அழகாகவும் அமைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு விழாவிற்கான அனைத்து செயற்பாடுகளும் கழகத் தொண்டர்கள் விளையாட்டு விழாவிற்கான விளையாட்டு நடத்துனர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களினால் வெகு சிறப்பாகவும் அழகாகவும் நிறைவேற்றப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

விழா காலை 9.15 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றும் வைபவத்துடன் ஆரம்பமானது. பொதுச்சுடரினைத் ஈழத்தமிழர் விடுதலைக்காக தன் இன்னுயிரை அர்ப்பணித்த மாவீரர் கப்டன் அகிலன் அவர்க்களின் சகோதரரரும் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் நீண்டநான் உறுப்பினருமான திரு. ஆறுமுகம் அரியராஜா அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து தாயக விடுதலை வேள்வியில் ஆகுதியாகிவிட்ட மாவீரர்கள்-விராங்கனைகளுக்கும் பொதுமக்களுக்கும் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் இழந்துபோன உறவுகளினதும் நினைவுகளுடன் அகவணக்க நிகழ்வு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள்; மற்றும் கௌர விருந்தினர்கள் பிரதம அதிதிகள் பாரிஸ் புறநகர் மாநகர சபைகளின் முக்கிய உறுப்பினர்கள் என பல முக்கியஸ்தர்கள் சிறப்பாக நிழ்வின் ஆரம்பத்திற்கே வருகைதந்திருந்ததுடன் பொதுமக்களும் கழக உறுப்பினர்களுமாக பெரும் திரளானவர்கள் காலையிலேயே நிகழ்வைச் சிறப்பிக்க வந்திருந்தமை விழாவிற்கு மேலும் பொலிவூட்டியிருந்தது. 

அகவணக்க நிகழ்வினைத் தொடர்து நிகழ்விற்கு வருகைதந்திருந்த கழக உறுப்பினர்கள் பொதுமக்கள் புடைசூழ முக்கியஸ்தர்கள் பிரதம விருந்தினர்கள் தமிழர்களின் பாரம்பரிய இசைவாத்தியமாக மங்கள நாதஸ்வரம் மேளத்துடன் கொடியேற்றும் இடம்வரை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இல்-து-சென்-தெனி மாநகசபை உறுப்பினர் திருமிகு ரவிசங்கர் மற்றும் தமிழகத்திலிருந்து வருகைதந்திருந்த பேராசிரியை - கவிதாயினி தமிழிச்சி தங்கபாண்டியன் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஆலோசகரும் திரான்சி மாநகரசபை உறுப்பினரும் உலகத்தமிழர் பண்பாட்டு இயக்க பிரான்ஸ் தலைவர் திருமிகு அலன் ஆனந்தன் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கௌரவ உறுப்பிரும் நாடுகடந்த தமிழீழ அரசவை உறுப்பினரும் ஸ்ரீலங்காவைப் புறக்கணிப்போம் அமைப்பின் பணிப்பாருமான திருமிகு நாகலிங்கம் பாலச்சந்திரன் தமிழர் புனர்வாழ்வுக்கழகத் தலைவர் திருமிகு கோணேஸ்வரன் பிரான்ஸ் சோசலிசக் கட்சியின் முன்னாள் பொறுப்பாளர் திருமிகு எட்வேட் ப்ரமின் ஆகியோர் மங்கலவிளக்கினை ஏற்றிவைத்துச் சிறப்பித்தனர். 

அதனைத் தொடர்ந்து கொடியேற்றல் வைபவம் இடம்பெற்றது. முதலில் பிரான்சின் தேசியக்கொடியினை சென்-செந்-தெனிஸ் மாகாண அவைத் தலைவர் திருமிகு ஸ்ரீபன் றூசெல் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழர் புனர்வாழ்வுக் கழகக் கொடியினை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நீண்டகால உறுப்பினரும் நியூலி-சூ-மார்ன் தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான திருமிகு குழந்தைவேலு தங்கத்துரை அவர்கள் ஏற்றி வைத்தார். ஐரோப்பியக் பாராளுமன்றக் கொடியினை லூ-ப்ளோங்-மெனில் மாநகரபிதா திருமிகு லூ-டீ-மிங்கோ அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து மங்கள இசை வளங்கிச் சிறப்பித்த நாதஸ்வரக் கலைஞர்கள் ழத்தமிழ்விழி திருமிகு நந்தகோபன் திருமிக சந்தானம் திருமிக ஸ்ரீஸ்கந்தரூபன் மற்றும் தவில் வித்துவான்கள் திருமிகு சிவாஜி திருமிகு காந்தன் திருமிக பாலமுரளி ஆகியோர் சென்-செந்-தெனிஸ் மாகாண அவைத் தலைவர் திருமிகு ஸ்ரீபன் றூசெல் அவர்களினால் சிறப்பாகக் கௌரவிக்கப்பட்டார்கள். அத்துடன் விழாவிற்கு வருகைதிருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் தமிழர் புனர்வாழ்வுக்கழக உறுப்பினர்களால் கௌரவிக்கப்பட்டார்கள். அதனைத் தொடர்ந்து புலம்பெயர் வாழ் தமிழிசைப் பாடகர் திருமிகு மயிலை இந்திரன் அவர்களினால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டது. 
கடந்த காலங்களைவிட இவ்வருடம் காலையிலேயே மக்கள் பெருந்திரளாக வருகைதந்திருந்தமையால் விளையாட்டுக்கள் யாவும் காலை 10.30 மணிக்கே ஆரம்பமாகி களைகட்டத் தொடங்கிவிட்டது. சிறுவர்பூங்கா கிளித்தட்டு தலையணைச் சண்டை சங்கீதக் கதிரை சதுரங்கம் முட்டி உடைத்தல் சாக்கோட்டம் உதைபந்தாட்டம் பொது அறிவுப்போட்டி கயிறிழுத்தல் போட்டி கரபந்தாட்டம் எனப் பல தேசிய விளையாட்டுக்களுக்கான களங்கள் ஆங்காங்கே சிறப்பாக அமைக்கப்பட்டிருந்ததுடன் அவற்றைச் சிறப்பாக நடாத்தும் வகையில் கழக உறுப்பினர்கள் மற்றும் தமிழர் விளையாட்டு விழாவிற்கான - விளையாட்டு ஒருங்கிணைப்புக்குழு தொண்டர்கள் நடுவர்களாகவும் தொண்டர்களாகவும் திறம்படச் செயற்பட்டுக் கொண்டிருந்தனர். போட்டிகளில் வெற்றயீட்டியவர்களுக்கு அவற்றுக்கான வெற்றிக்கிண்ணங்களும் கேடயங்களும் உடனுக்குடன் வழங்கி அவர்களை உச்சாகப்படுத்தி சிறப்பித்தக்கொண்டிருந்தமை விழாவிற்கு மேலும் சிறப்பாக அமைந்திருந்தது. 

அத்துடன் நீங்களும் பாடலாம் நிகழ்வானது மைதானத்தின் மற்றுமோர் தளத்தில் சிறப்பாக இடம்பெற்றுக்கொண்டிருந்தது. நிகழ்விற்கு ஸ்ரீ பத்திரகாளியம்மன் இசைக்குழுவினர் இசைவழங்கிச் சிறப்பித்துக்கொண்டிருந்தனர். மற்றும் கலைஞர்களின் நாடகமும் சிறப்பு நிகழ்வாக இடம்பெற்றது. பல்லின ஒற்றமையின் பாங்காக பஞ்சாப் நடனக்குவினரின் சிறப்பு நடனமும் மொறிசியஸ் தமிழரின் நடனக் கலைவடிவமும்  இடம்பெற்றதுடன் மேற்படி நடனங்கள் பார்வையாளர்களைச் சிறப்பாகக் கவர்ந்திருந்தமையால் பெருந்திரளான மக்கள் அவர்களைச் சுற்றித் திரண்டிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும். இவ்வருடம் சிறப்பாக கல்யாணி உணவுச்சேவையினர் தாயக உணவுகளை விளையாட்டு விழா மைதானத்தில் சிறப்பாக வழங்கிக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். நுழைவாயில் பிரவேசச் சீட்டு அதிஸ்டம் பார்க்கப்பட்டு அதற்கான பரிசான மென்-உந்துருளி (ஸ்கூட்டர்) மைதானத்திலேயே பரிசளிக்கப்பட்டது. அவ்வாறே இவ்வருடமும் போன் - 2000 நிறுவனத்தாரின் அதிஸ்டலாபச் சீட்டிழுப்பும் சிறப்பாக இடம்பெற்றது.

மேற்படி விளையாட்டுக்களைப் பார்க்கவும் போட்டிகளில் பங்குகொள்வதற்குமாய் திரண்டிருந்த மக்கள் கூட்டம் ஆர்வமாய் நிகழ்வுகள் நடைபெறும் தளங்களுக்கு மாறிமாறிப் பயணப்பட்டுக்கொண்டிருந்தமையை மைதானத்தில் சிறப்பாகக் காணக்$டியதாக இருந்தது. அந்தவகையில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஏறத்தாள ஏழாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வருகைதந்திருந்த விழாவானது விளையாட்டக்களின் ஆர்வமிகுதியால் அன்றையதினம் மாலை 9.00 மணியைத் தாண்டியதையும் யாரும் கவனிக்கவில்லை என்பதை மாலைக் கருக்கல் காட்டிய பொழுதுதான் அவசர அசவரமாக விளையாட்டுவிழாவை முடிவக்குக் கொண்டுவரும் முயற்சியில் தொண்டர்கள் ஈடுபட்டக்கொண்டிருந்ததை காணக்கூடியதாய் இருந்தது. ஆயினும் வந்திருந்த மக்கள் கூட்டமோ மைதானத்தைவிட்டகல மனமில்லாதவர்களாய் மற்றுமோர் விளையாட்டுவிழாவிற்காய் மகிழ்வோடு காத்திருக்கும் நினைப்புடன் மைதானத்தைவிட்டு பிரிய முடியாமல் பிரிந்து சென்றமை மனதைவிட்டகலாத நினைவுகளாய் மனத்திரையில் நிழலாடிக்கொண்டிருக்கின்றது.  

- இலங்கயர்கோன்