தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - பிரான்ஸ்
முதற்பக்கம்
செய்திகள்
வெண்புறா
HDU
செயற்பாடுகள்
திட்டங்கள்
காப்பகம்
அறிக்கை
கட்டுரை
நேர்காணல்
காணொளிப்படம்
நிழற்படம்
எம்மைப்பற்றி
தொடர்புக்கு
எமது முகவரி
ORT France,
26,rue du Département,
75018 Paris,
France.
Tél: 01 40 38 30 74
Fax: 01 53 26 09 77
trofr@hotmail.com

உதவிசெய்ய

Par virement bancaire
Banque : Credit Lyonnais
63bis rue Daurémont
75018 Paris
Code Banque - 30002
Code Guichet - 00408
N° Compte - 0000005584F
Clé RIB - 10

 
 
 

தமிழர் விளையாட்டு விழா 2010
பத்திரிகைச் செய்தி
05.07.2010 ஊடகப்பிரிவு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - பிரான்ஸ்

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ் உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் இணைந்து நடாத்திய 13வது தமிழர் விளையாட்டு விழா 04-07-2010 ஞாயிற்றுக்கிழமை லூபூர்சே எயார் தூ பார்க் துனி மைதானத்தில் காலை 10 மணிக்கு, திருமதி. அனுசா மணிவண்ணன் அவர்களின் நெறியாட்கையில் தமிழ்ச்சோலை மாணவிகளினால் தமிழர்களின் பாரம்பரிய நடனமாகிய இனியம், நடனம் மற்றும் கோபு குழுவினரின் தவில் நாதஸ்வர இசையுடன் ஆரம்பமாகியது.

போரினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் கொல்லப்பட்ட மக்களையும் வீரச்சாவடைந்த மாவீரர்களையும் நினைவு கூர்ந்து பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக்கழக பணிப்பாளர் திரு. சுந்தரவேல் அவர்களால் பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது. பிரான்ஸ் தேசியக் கொடியை சென் செந்தெனிஸ் பாராளுமன்ற உறுப்பினர் டானியல் கோல்பேக் அவர்கள் ஏற்றி வைத்தார். தமிழர் புனர்வாழ்வுக் கழகக் கொடியை பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தலைவர் திரு. த.கோணேஸ்வரன் அவர்கள் ஏற்றி வைத்தார். ஜரோப்பிய ஒன்றியக் கொடியை உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தலைவரும் ரான்சி நகரமன்ற உறுப்பினருமான திரு.அலன் ஆனந்தன் அவர்கள் ஏற்றி வைத்தார்.

விடுதலை வீரர்களையும் போரினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் சாவடைந்த மக்களை நினைவு சுமந்த நினைவுத் தூபியில் பாராளுமன்ற உறுப்பினர், லூபூர்சே, ஒபேவில்லியே, லாக்கூர்நெவ், நகர பிதாக்கள், நகர மன்ற உறுப்பினர்கள் புனர்வாழ்வுக்கழக தொண்டர்கள் தமிழ் அமைப்புக்களின் தலைவர்கள் சமுக பெரியோர்கள் பொதுமக்கள்; அனைவரும் மலர் வணக்கம் செலுத்தினர்.

வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் தமது கருத்துரைகளை வழங்கினர். அதனைத் தொடர்ந்து விளையாட்டுக்கள் ஆரம்பமாகியது.

சிறுவர்களுக்கான விளையாட்டுக்களுடன் பெரியவர்களுக்கான கயிறு இழுத்தல், சங்£தக் கதிரை, தலையணைச் சண்டை, முட்டி உடைத்தல், ஈருருளி மெது ஓட்டம், சாக்கு ஓட்டம், தாச்சிப் போட்டி, பேணிப்பந்து ஆட்டம், சிறந்த தண்டனை வீரர்களுக்கான ஆட்டம், இன்னும் பல விளையாட்டுக்களுடன் மேற்கத்தைய நடனம், நாடகம் பிரபல தென்னித்திய கலைஞரும் பாடகரமான கங்கை அமரனுடன் நீங்களும் பாடலாம் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

லிபெரா தொலைபேசி, பிளாஸ் பிரின்ட், ஆட்டெக்கோ நிறுவனங்களின் ஆதரவில் நடைபெற்ற நல்வாய்ப்பு சீட்டிழுப்பு நடைபெற்று வெற்றி பெற்ற இலக்கங்கள் அறிவிக்கப்பட்டது.

1 ம் பரிசு இலக்கம் 1763 மகிழ்ஊர்தி பெற்றுக்கொள்ளவில்லை
2 ம் பரிசு இலக்கம் 1133 உந்துருழி பெற்றுக்கொண்டார்
3 ம் பரிசு
1 இலக்கம் 2979 கைத்தொலைபேசி பெற்றுக்கொண்டார்
2 இலக்கம் 1446 கைத்தொலைபேசி பெற்றுக்கொண்டார்
3 இலக்கம் 2540 கைத்தொலைபேசி பெற்றுக்கொண்டார்
4 இலக்கம் 2100 கைத்தொலைபேசி பெற்றுக்கொண்டார்

5 இலக்கம் 3912 கைத்தொலைபேசி பெற்றுக்கொள்ளவில்லை
6 இலக்கம் 2624 கைத்தொலைபேசி பெற்றுக்கொள்ளவில்லை
7 இலக்கம் 210 கைத்தொலைபேசி பெற்றுக்கொள்ளவில்லை
8 இலக்கம் 764 கைத்தொலைபேசி பெற்றுக்கொள்ளவில்லை
9 இலக்கம் 2141 கைத்தொலைபேசி பெற்றுக்கொள்ளவில்லை
10 இலக்கம் 3032 கைத்தொலைபேசி பெற்றுக்கொள்ளவில்லை

விழா நுழைவுச் சீட்டுக்கான நல்வாய்பு பார்க்கப்பட்டு ரகுமான் இ;சை சிகழ்ச்சியை பார்ப்பதற்கான வெற்றி பெற்ற சீட்டுக்களின் இலக்கங்கள் அறிவிக்கப்பட்டது.

1 ம் பரிசு
இலக்கம் 2321 100 ஈரோ நுழைவுச் சீட்டு பெற்றுக்கொள்ளவில்லை
2 ம் பரிசு
இலக்கம் 2547 29 ஈரோ 2 நுழைவுச் சீட்டு பெற்றுக்கொள்ளவில்லை
3 ம் பரிசு
இலக்கம் 941 29 ஈரோ 1 நுழைவுச் சீட்டு பெற்றுக்கொள்ளவில்லை

அதனைத் தொடர்ந்து போண் 2000 நிறுவனத்தால் நடாத்தப்பட்ட கைத்தொலைபேசிகளுக்கான நல்வாய்ப்பு சீட்டிழுப்பு நடைபெற்று வெற்றி பெற்ற இலக்கங்கள் அறிவிக்கப்பட்டது.

முதலாம் பரிசு 0053
இரண்டாம் பரிசு 0070
மூன்றாம் பரிசு 00138

வர்த்தக நிறுவனங்களின் மலிவு விலைக் கடைகள் விளம்பர அலுவலகங்கள் தொலைக்காட்சி வானொலி பத்திரிகை நிறுவனங்களின் விளம்பர அலுவலகள்கள் கலை அரங்குகள் மற்றும் தமிழ் அமைப்புக்களின் அலுவலகங்கள் தங்கள் விளம்பரங்களை முன்னெடுத்தார்கள்.

தாயகத்தின் சுவை குன்றிடா உணவு வகைகளைத் தயாரித்து வருகை தந்த மக்களின் உள்ளம் நிறைந்திட தமிழர் உணவகம் தயாரித்து வழங்கியது. ஏழாயிரத்துக்கு மேற்பட்ட மக்களுடன் இரவு பத்து மணிக்கு விழா இனிதே நிறைவு பெற்றது.

ஓன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ்