தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - பிரான்ஸ்
முதற்பக்கம்
செய்திகள்
வெண்புறா
HDU
செயற்பாடுகள்
திட்டங்கள்
காப்பகம்
அறிக்கை
கட்டுரை
நேர்காணல்
காணொளிப்படம்
நிழற்படம்
எம்மைப்பற்றி
தொடர்புக்கு
எமது முகவரி
ORT France,
26,rue du Département,
75018 Paris,
France.
Tél: 01 40 38 30 74
Fax: 01 53 26 09 77
trofr@hotmail.com

உதவிசெய்ய

Par virement bancaire
Banque : Credit Lyonnais
63bis rue Daurémont
75018 Paris
Code Banque - 30002
Code Guichet - 00408
N° Compte - 0000005584F
Clé RIB - 10

 
 
 

பத்திரிகைச் செய்தி 13வது தமிழர் விளையாட்டு விழா 04.07.2010
செய்திப்பிரிவு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - பிரான்ஸ்
30.06.2010

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ், உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் இணைந்து நடாத்தும் 13வது தமிழர் விளையாட்டு விழா 04.07.2010 ஞாயிற்றுக்கிழமை லூ பூர்சே, ஏயர் தூ பாக்கில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. (L'Air des Vents Dugny, Parc Départemental de La Courneuve , de 9h00 jusqu'à 20h00) >>>>>

எமது எதிர்கால சந்ததிக்கு, எமது கலை பண்பாடுட்டு விழுமியங்களோடு, எமது பாரம்பரிய தமிழர் விளையாட்டுக்களையும் அறிந்து கொள்ள உதுவுவதோடு மட்டுமல்லாமல் ஒரு நாள் மாபெரும் தமிழ் உறுவுகளின் சங்கமாக கூடிக்களித்து மகிழ்ந்து அன்பையும் சகோதரத்துவத்தையும் பேணி வளர்த்திடும் உன்னத நிகழ்வாக நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் கடந்த காலங்களில் இவ்விழாவிற்கு வருகைதந்து ஆதரவு வழங்கியதுபோல் இவ்வாண்டும் வருகைதந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
புலத்திலும் தாய் நிலத்திலும் பயன்தரும் இவ்விழாவை முன்னிட்டு சிறப்பு நல்வாய்ப்புச்சீட்டிழுப்பும் நடைபெறவுள்ளது.

முதலாம்பரிசாக LEBARA ஆதரவில் மகிழ்ஊர்தி (9100 ஈரோ பெறுமதி)
இரண்டாவதுபரிசாக FRANCIS PLISSAGE ஆதரவில் உந்துருளி
மூன்றாவது பரிசாக 10நபர்க்கு LEBARAசிம்காட்டுடன் LEBARA MOBILE தொலைபேசிகள்

நல்வாய்ப்புச்சீட்டு 5 ஈரோக்கள், முன்பே பெற்றுக்கொள்ளும் நல்வாய்ப்புச்சீட்டை மைதான நுழைவுச்சீட்டாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

சாதாரண மைதான நுழைவுச்சீட்டு 3 ஈரோக்கள், பிறிதாக நல்வாய்ப்பு பார்க்கப்பட்டு ஏ.ஆர் ரகுமான் அவர்களின் இசைநிகழ்ச்சி பார்ப்பதற்கான 3 நுழைவுச்சீட்டுக்கள் வழங்கப்படும்.

1 வது 1, 100 ஈரோ ரிக்கற்
2 வது 2, 29 ஈரோ ரிக்கற்
3 வது 1, 29 ஈரோ ரிக்கற்

நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றிபெறும் நல்வாய்பாளருக்கு வழங்கப்படவுள்ளது.

காலை 9 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளது, காலை 10 மணிக்கு முன் வருபவர்களுக்கு நுளைவுக்கட்டணம் அறவிடப்படமாட்டாது என்பதையும் மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.

காலை 9 மணிக்கு சிறப்பு விருந்தினர்கள் அழைத்து வருதல்
இனியம் பாரம்பரிய தமிழர் பண்பாட்டு நடனம்
தவில் நாதஸ்வர இசை
நினைவுத்தூபி முன் பொதுச்சுடரேற்றல்
அமைதிவணக்கம்
பிரெஞ்சு தேசியக்கொடியேற்றல்
தமிழர் புனர்வாழ்வுக்கழகக் கொடியேற்றல்ஐரோப்பிய ஒன்றியக்கொடியேற்றல்
மலர்வணக்கம்
சிறப்பு விருந்தினர் சிறு கருத்துரைகள்

அதனைத்தொடர்ந்து விளையாட்டுக்கள் ஆரம்பமாகும்
தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்
சிறுவர் விளையாட்டுக்கள்
கங்கையமரன் தொகுப்பில் நீங்களும் பாடலாம்
துள்ளிசை நடனங்கள்
இன்னும் பல வேடிக்கை விநோத நிகழ்வுகளுடன்

வருடத்தில் ஓர் நாள் ஒன்றாய் கூடி மகிழ்வாய் களித்திட
கூடிக்கதை பேசி உண்டு மகிழ்ந்திட
தமிழர் உணவகம் காலை முதல் மாலைவரை சுடச் சுட உணவுப்பண்டங்களை தயாரித்து வழங்கவுள்ளது

வருகைதரும் மக்களின் போக்கு வரத்துக்காக எமது ஏற்பாட்டில் சிறப்பு பேரூந்து சேவை இலவசமாக நடைபெறும். ORT France தமிழர் விளையாட்டு விழா என்ற பேரூந்தில் கட்டணமின்றி காலை 9 மணிமுதல் இரவு 9மணிவரை RER B LE BOURGET இல் இருந்து மைதானம் வரை பயணிக்கமுடியும்.

ஓன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ்