தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - பிரான்ஸ்
முதற்பக்கம்
செய்திகள்
வெண்புறா
HDU
செயற்பாடுகள்
திட்டங்கள்
காப்பகம்
அறிக்கை
கட்டுரை
நேர்காணல்
காணொளிப்படம்
நிழற்படம்
எம்மைப்பற்றி
தொடர்புக்கு
எமது முகவரி
ORT France,
84 ,rue philippe de Girad,
75018 Paris, France.
Tél: 01 40 38 30 74
trofr@hotmail.com

உதவிசெய்ய

Par virement bancaire
Banque : Credit Lyonnais
63bis rue Daurémont
75018 Paris
Code Banque - 30002
Code Guichet - 00408
N° Compte - 0000005584F
Clé RIB - 10

 
 
 

சுனாமி (ஆழிப்பேரலை) 8ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ் 26-12-2012

பத்திரிகைச் செய்தி

செவ்றோன் நகரசபையும், தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்சும் இணைந்து ஏற்பாடு செய் த சுனாமி (ஆழிப்பேரலை) 8ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு 26.12.2012 புதன்கிழமை மாலை 4.45 மணிக்கு செவ்றோன் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

2004ம் ஆண்டு மார்கழி 26ம் நாள் இந்தோனேசிய சுமத்திரா தீவில் ஏற்பட்ட கடற்கோள் தென்கிழக்காசியாவின் இந்து சமுத்திர கரையோர நாடுகளைத்தாக்கி 250000ற்கு மேற்பட்ட மக்களை காவுகொண்டு, உடமைகளையும் இல்லாதொழித்த கொடிய அவலம் நிகழந்தேறி எட்டு ஆண்டுகள்.

இலங்கையின் வடக்கு கிழக்கில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களை காவுகொண்டு பெரும் பொருள் அழிவையும், உளவியல் பாதிப்பையும் ஏற்படுத்திய காயம் ஆறமுன், 2009ம் ஆண்டு சிறீலங்கா அரசின் கொடிய யுத்தத்தினால் சுனாமி அவலத்தை சுமந்த மண் மீண்டும் கந்தகத்தீயினாலும், செல்வீச்சு, விமானக்குண்டுவீச்சுக்களாலும் பல்லாயிரம் உயிர்களையும், உடமைகளையும் சாம்பலாக்கி ஆறாத வடுவினை ஏற்படுத்தயுள்ளது.

இத்தனை கொடுமைகளையும் அடக்குமுறைகளையும் தாங்கி வாழ்கின்ற எம் மக்களுக்கு உதவுவதும், அவர்கள் சுயமான வாழ்வு வாழ வழிவகை செய்வதும் புலம் பெயர்ந்து வாழும் ஒவ்வொரு தமிழனுடைய கடமையாகும்..

2005ம் ஆண்டு சுனாமி மீள்கட்டுமான பணிக்காக தமிழர் தரப்பும் சிறீலங்கா தரப்பும் இணைந்து ஒரு பொதுக்கட்டமைப்பை உருவாக்கினர். இதனால் தமிழர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. இதனையும் சிங்கள இனவாதிகள் இல்லாதொழித்தனர். ஆகக்குறைந்த தமிழர் நலன் சார்ந்த விடையங்களை கூட வழங்குவதற்கு சிங்கள அரசுகள் தயாரக இல்லை. எனவே சர்வதேச நாடுகள் இதனை புரிந்து கொண்டு தமிழர்களுக்கு நியாயமான உரிமைகள் கிடைப்பதற்கு ஒரு பொறிமுறையை உருவாக்கி அதனூடாக தமிழர்களுக்குரிய அனைத்துலக பாதுகாப்பை வழங்கி, சனநாயகவழியில் அவர்கள் விரும்பிய தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு உதவுவதே தமிழர்களின் இத்தனை அழிவுகளுக்கும் அர்த்தமுண்டாக்கும்.
இயற்கையும் மீண்டும் மீண்டும் தமிழர் பகுதிகளை தாக்கி வருகின்றது. தற்பொழுதும் வடக்கு கிழக்கு பிரதேச மக்கள் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு பெரும் நிர்க்கதிக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுக்கான உதவிகளை நேரடியாகவும், உள்ளுர் தொண்டு நிறுவனங்கள் ஊடாகவும் வழங்குங்கள். நம்பிக்கை கொண்ட எம் தாயமக்களுக்கு ஊன்று கோலாய் என்றும் இருப்போமென இன்றைய சுனாமி நினைவு நாளில் உறுதி கொள்வோம்.

ஆழிப்பேரலையின் ஊளித்தாண்டவத்தில் பலியான மக்களை நினைவு கூர்ந்து வணக்கம் செலுத்தும் நிகழ்வில் பிரதான பொதுச் சுடரினை தமிழர் புனர்வாழ்க்கழக மக்கள் தொடர்பாளர் திரு. புண்ணியமூர்த்தி தர்சன் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை அற்பணித்த மாவீரர்களையும், போரினாலும் இயற்கை அனர்த்தங்களாலும் கொல்லப்பட்ட மக்களையும் நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

சுனாமி நினைவுச் சுடரினை செவ்றோன் நகரமன்ற துணைநகரபிதா திரு.மிசல் சத்னே (Michel CUATENET) நாடுகடந்த தமிழீழ அரசு பாராளுமன்ற உறுப்பினரும், தமிழர் புனர்வாழ்வுக்கழக உபதலைவருமான திரு.முத்தையா கருணைராஜன்;, சுனாமியில் தனது உறவுகளை இழந்த திருமதி. அகிலா ஜெகதிஸ்வரன், தமிழர் நடுவம் பிரதிநிதி திரு.அமுதன், நுய்லி சூமாறன் தமிழ்ச் சங்கத்தலைவர் திரு. தங்கத்துரை, புனர்வாழ்வுக்கழக உறுப்பினரும் அருள் சொனோ உரிமையாளருமான திரு.அருளானந்தம், தமிழர் புனர்வாழ்வுக்கழகத் தலைவர் திரு. தர்மலிங்கம் கோணேஸ்வரன் ஆகியோர் ஏற்றி வைத்தனர். அதனைத் தொடர்ந்து இந்நிகழ்வுக்வு வருகை தந்த தமிழர் புனர்வாழ்வுக்கழக உறுப்பினர்கள், நாடு கடந்த அரச பிரதிநிதிகள், தமிழர் நடுவ பிரதிநிதிகள், தமிழ்ச்சங்க உறுப்பினர்கள், கலைஞர்கள், சமூகஆர்வலர்கள், உணர்வோடு வருகைதந்த மக்கள் அனைவரும் மலர் தூவி நினைவுச்சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தினர்.

திருமதி. மீரா மங்களேஸ்வரன் அவர்களின் நிருத்தியாலயம் கலைக்கல்லுரி மாணவிகள் இரண்டு சுனாமி நினைவுப் பாடல்களுக்கு நடனமாடி வணக்கம் செலுத்தினர்.
கிராமிய இசை வேந்தன் மையிலையூர் இந்திரன் அவர்கள் சுனாமி அவலங்களை பாமாலையாக மெய்யுருகி சாத்தினார்.
செல்வி தாரணி கோணேஸ்வரன் அவர்கள் சுனாமி அவலங்களை பிரஞ்சில் கவி பாடினார்.

தமிழர் புனர்வாழ்வுக்கழக சட்டத்தரணி திரு. பிரான்சுவா இளங்கோ, துணை நகரபிதா திரு.மிசல் சத்னே, தமிழர் புனர்வாழ்வுக்கழக கௌரவ உறுப்பினர் திரு. தம்பையா விநாயகமூர்த்தி, நாடு கடந்த தமிழீழ அரசு பாராளுமன்ற உறுப்பினரும், தமிழர் புனர்வாழ்வுக்கழக கௌரவ உறுப்பினருமான திரு.நாகலிங்கம் பாலச்சந்திரன், தமிழர் நடுவக பிரதிநிதி திரு.அமுதன், நாடு கடந்த தமிழீழ அரசு - கல்வி, உடல்நலன், விளையாட்டுத்துறை துணை அமைச்சர் திரு.மைக்கல் கொலின்ஸ், சுனாமி பேரழிவில் மக்களோடு மக்களாக நின்று பணியாற்றிய தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் திரு.சந்தோஸ் ஆகியோர் சுனாமி நினைவுரைகளை வழங்கினர்.

தமிழர்களின் வாழ்வில் என்றும் மறக்கமுடியாதவை, சுனாமி பேரவலமும், முள்ளிவாய்க்கால் பேரவலமும். இந்த கொடுமைகள் தந்த ஊனங்களும், இழப்புக்களும் நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும். வலி சுமந்த மக்கள் உணவுக்காய் காத்திருப்பதும், கல்வி, போசாக்கின்மையால் வாடுவதும், மருத்துவ உதவியின்றி இறப்பதும், கைதுகளும், காணாமல் போதல்களும் தமிழனுக்கு சபிக்கப்பட்ட வாழ்வாகிப்போனதோ? இல்லை நம்பிகையோடு எழுவோம். ஆறுதல் ஆற்றுகையை செய்வோம்.

வாருங்கள் வாழ்வினை மீளக்கட்டியெழுப்புவோம்.
இந்நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். வணக்க நிகழ்வு மாலை 7.00 மணிக்கு நிறைவு பெற்றது.

ஒன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ்