ஆழிப்பேரலையின் ஊழித்தாண்டவத்தில் காவுகொள்ளப்பட்ட பல்லாயிலக்கணக்கான மக்களின் 11ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு.

பத்திரிகைச் செய்தி 26.12.2015

தமிழர் புனாழ்வாழ்வுக் கழகம் பிரான்ஸ்இ பாரிஸ் 18 நகரசபை இணைந்து நடாத்திய ஆழிப்பேரலையின் ஊழித்தாண்டவத்தில் காவுகொள்ளப்பட்ட பல்லாயிலக்கணக்கான மக்களின் 11ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு 2612.2015 ஞாயிறு 12.00 மணிக்கு இளையோர் விவகாரங்களுக்கான 20 RUE PAJOL பாரிஸ் 75018 மண்டபத்தில் நடைபெற்றது.

தாயக விடுதலைக்காக தமது இனிய உயிரை அற்பணித்த மாவீரர்களையும் போரினாலும் இயற்கை அனர்த்தங்களாலும் சாவடைந்த மக்களையும் மற்றும் அண்மையில் france ல் கொல்லப்பட்ட மக்களையும் நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

பிரதான பொதுச்சுடரினை பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக்கழக கௌரவ உறுப்பின திரு. ஜேயசூரியர் ஏற்றிவைக்க அதனைத்தொடர்ந்து ரான்சி நகரமன்ற உறுப்பினரும் உலகத் தமிழர் பண்பாட்டியக்க பிரான்ஸ் தலைவருமான திரு. அலன் ஆனந்தன் இளயோர் சார்பாக செல்வி துளசி குருபரன் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து நாடுகடந்த தமிழீழ அரச பிரதிநிதிகள் தமிழ்ச்சங்க பிரதிநிதிகள் தமிழர் புனாழ்வாழ்வுக் கழகப் பிரதிநிதிகள் கலைஞர்கள் சமூகஆர்வலர்கள் மற்றும் வருகைதந்த மக்கள் அனைவரும் விளக்கேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தினர்.

உலகத்தையே 2004 ஆண்டு உலுக்கிய சுனாமிப் பேரவலத்தில் பல ஆயிரம் மக்கள் பரிதாபமாக உயிரிழந்ததை யாம் அறிவோம். இந்த பேரழிவை 11 வருடமாக நாங்கள் நினைவு கூர்ந்து வருகின்றோம். இன்று பாரிஸ் லாச்சப்பலில்  பகுதியில் அமைந்துள்ள நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர் அஞ்சலிக் கூட்ட நிகழ்வை திரு.அருள்மொழித்தேவன் தலமை தாங்கினார். சுனாமி அஞ்சலி நினைவு வணக்க உரையை தமிழர் புனர்வாழ்வுக் கழக பணிப்பாளர் திரு.சுந்தரவேல் மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தலைவர் திரு.கோணேஸ்வரன்  இஉபதலைவர் திரு.கருணைராஜன் அவர்களும் சுனாமியின் போது வடபகுதியில் UNHCR நிறுவனத்தில் பணிபுரிந்த திரு.சுரேந்திரா அவர்களும் நிகழ்த்தினர் தொடந்து திரு.சுதர்சன் அவர்கள் சுனாமி நினைவுக் கவிதையொன்றை வாசித்தார்.

பின்னர் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வளச்சி பற்றியும் இந்த நிறுவனத்தை வடக்கு கிழக்கில் வாழுகின்ற மக்களுக்கு எவ்வாறு உதமுடியும் எனவும் கலந்தாய்வு ஒன்றும் இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் தமிழர்களின் நிலை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் பிரஞ்சு நாடாளுமன்ற உறுப்பினரான திருமதி. மரியோச்பூவே அவர்களின் தலைமையில் அமைந்துள்ள “பிரஞ்சு நண்பர்கள்” என்ற அமைப்பு நாடாளுமன்றத்திநூடாக தமிழர்களுக்கான ஓர் சாதகமான நிலையினை உருவாக்க முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளாதாகவும் கூறப்பட்டது.

அத்துடன் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கௌரவ உறுப்பினர் திரு. ஜெயசூரியர் திரு.தர்மதேவன் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நீண்டகால உறுப்பினர்கள் திரு.பரா திரு.மனோ திருமதி சுபா நாடு கட ந்த அரசின் பிரதிநிதி திரு.சுதன்ராஜ் G TV செய்தியாளர் திரு.குருபரன் கருத்துக்களை வழங்கினர் . மற்றம் இளம் தலைமுறையினர் செல்வி -தச்சாயினி ஆகியொர்களின் கருத்துக்களைத் தொடந்து நினைவு வணக்க நிகழ்வு நிறைவு பெற்றது.

நன்றி

ஒன்றிணைவோம் சேவை செய்வோம்