தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - பிரான்ஸ்
முதற்பக்கம்
செய்திகள்
வெண்புறா
HDU
செயற்பாடுகள்
திட்டங்கள்
காப்பகம்
அறிக்கை
கட்டுரை
நேர்காணல்
காணொளிப்படம்
நிழற்படம்
எம்மைப்பற்றி
தொடர்புக்கு
எமது முகவரி
ORT France,
84 ,rue philippe de Girad,
75018 Paris, France.
Tél: 01 40 38 30 74
trofr@hotmail.com

உதவிசெய்ய

Par virement bancaire
Banque : Credit Lyonnais
63bis rue Daurémont
75018 Paris
Code Banque - 30002
Code Guichet - 00408
N° Compte - 0000005584F
Clé RIB - 10

 
 
 

13வது சலங்கை பரதவிழா
பத்திரிக்கை செய்தி

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் 28-04-2013

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் நடாத்திய 13வது சலங்கை பரதவிழா 28-04-2013, 50 Place de Torcy, 75018 Paris . மணடபத்தில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரான்சில் புகழ்பூத்த நிருத்தியாலயம் கலைக்கல்லூரி, ஆடற்கலையகம், சுமித்திரா பரதநாட்டியாலயம், நர்த்தன விருக்ஷh, நர்த்தனாதீரா நடனாலயம், கலாபவனம், இவ்ரி சூர் சென் நடனப் பள்ளி, பொண்டி நடனப் பள்ளி, கவின் கலையகம் ஆகிய நடனப் பள்ளி மாணவிகள் மற்றும் இசைப் பிரியா நடனக் குழு உட்பட 124 மாணவிகள் 16 நடனங்களை வழங்கி சிறப்பித்தனர்.

பரதவிழா நிகழ்வின் பிரதான பொதுச்சுடரினை தமிழர் புனர்வாழ்வுக் கழக பிரான்ஸ் தலைவர் திரு. த. கோணேஸ்வரன் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து போரினாலும், இயற்கை அனர்த்தங்களினாலும் சாவடைந்த மக்களை நினைவு கூர்ந்து அக வணக்கம் செலுத்தப்பட்டது.

மங்கள விளக்குகளை லா கூர்நெவ் தன லக்ஷ;மி மகால் உரிமையாளர் திரு. பரமானந்தம், நடன ஆசிரியைகளான திருமதி. கஸ்தூரி ஜெகதீபன், திருமதி. மீரா மங்களேஸ்வரன், திருமதி. அனுஷh மணிவண்ணன், மஞ்சுளா இராஜலிங்கம், ஜி ரிவி பிரான்ஸ் நிர்வாக இயக்குனர் திரு. குருபரன் ஆகியோருடன் நாடுகடந்த தமிழீழ அரசின் முன்னாள் உள்துறை அமைச்சர் திரு. நா. பாலச்சந்திரன், இடம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் மறுவாழ்வு அரசியல் கைதிகள் விவகார அமைச்சர் திரு. சி. மகிந்தன் ஆகியோர் ஏற்றிவைத்தனர்.

வரவேற்புரையினை தமிழர் புனர்வாழ்வுக் கழக பிரான்ஸ் பணிப்பாளர் திரு. செ. சுந்தரவேல் அவர்களும் சிறப்புரையினை தமிழர் புனர்வாழ்வுக் கழக பிரான்ஸ் சட்ட ஆலோசகரும், சட்டத்தரணியுமான திரு. ந. பிரான்சுவா இளங்கோ அவர்களும் நிகழ்த்தினர்.

நடன ஆசிரியர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி பொன்னாடை அணிவித்து திருமதி. மனோரஞ்சிதம் மனோகரன் அவர்கள் மான்பேற்றினார்.

நடனங்களை வழங்கிய நடனப் பள்ளி மாணவிகளுக்கான சான்றிதழ்களை திரு. பரமானந்தம், திரு. இளங்கோ, திரு. ஜெயசூரியர், திரு. தங்கத்துரை, திரு. சுந்தரவேல், திரு. மகிந்தன், திரு. செல்வரஞ்சன், திரு. குருபரன், திருமதி. கறோள், திரு. அருளானந்தன், திரு. பரராசா, திரு. ரவீந்திரன், திரு. பாக்கியநாதன், திரு. சிவதாசன், திருமதி. சந்திரிக்கா, திரு. அரியரத்தினம், திரு. சத்தியசீலன் ஆகியேர் வழங்கி உற்சாகப்படுத்தினர்.

நன்றியுரையினை கழக உறுப்பினர் திரு. பா. கிஷ;ணகாந்தன் வழங்கினார். நிகழ்ச்சித் தொகுப்பினை கழக கௌரவ உறுப்பினர் திரு. த. விநாயகமூர்த்தி அவர்களுடன் செல்விகள் சுஜிஷ;டா மற்றும் நஜித்தா, திரு. அருள்மொழித்தேவன் ஆகியோர் தொகுத்து வழங்கினார்.

இந் நிகழ்வு சிறப்புற அருள்சோனோ, பேபி பலூன், போட்டோ மணி, 5டி எனடர்டெய்மென்ட் வீடியோ குழுவினர் மற்றும் வர்த்தக ஸ்தாபனத்தினர், கழக உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் தங்கள் உறுதுணைகளை வழங்கினர்.

இந் நிகழ்வு மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் மாலை 7.30 மணிக்கு இனிதே நிறைவு பெற்றது.

இவ் விழாவில் நாடுகடந்த தமிழீழ அரசின் சுதந்திர சாசனம் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. சலங்கை பரதவிழாவினை வாழ்த்தியும், சுதந்திர சாசனத்தின் முக்கியத்துவம் பற்றியும் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் திரு. உருத்திரகுமாரன் அவர்கள் இணைய வலை ஊடாக உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பிரான்ஸ் பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை வழங்கி பரப்புரை பிரதிகளை மக்களுக்கு விநியோகித்தனர்.

நன்றி

ஒன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ்