தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - பிரான்ஸ்
முதற்பக்கம்
செய்திகள்
வெண்புறா
HDU
செயற்பாடுகள்
திட்டங்கள்
காப்பகம்
அறிக்கை
கட்டுரை
நேர்காணல்
காணொளிப்படம்
நிழற்படம்
எம்மைப்பற்றி
தொடர்புக்கு
எமது முகவரி
ORT France,
26,rue du Département,
75018 Paris,
France.
Tél: 01 40 38 30 74
Fax: 01 53 26 09 77
trofr@hotmail.com

உதவிசெய்ய

Par virement bancaire
Banque : Credit Lyonnais
63bis rue Daurémont
75018 Paris
Code Banque - 30002
Code Guichet - 00408
N° Compte - 0000005584F
Clé RIB - 10

 
 
 

சலங்கை பரதவிழா 2011
புத்திரிகைச் செய்தி
21-02-2011

சலங்கை 2011 நிழற்படங்கள்

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் 11வது தடவையாக நடாத்திய சலங்கை பரதவிழா 20-02-2011 அன்று இலக்கம் 50 Avenue du Président Wilson 93200 La Plaine Saint Denis மண்டபத்தில் பி.ப 1.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.

நிகழ்ச்சி ஆரம்பத்தில் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார், திருமதி. வேலுப்பிள்ளை பார்வதியம்மாள் அவர்களுக்கான நினைவுச் சுடரினை த.பு.க பிரான்ஸ் பணிப்பாளர் திரு. சுந்தரவேல் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை ஈர்ந்த மாவீரர்களையும், போரினாலும் இயற்க்கை அனர்த்தங்களினாலும் சாவடைந்த மக்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து பார்வதியம்மாளின் திருவுருவப் படத்திற்க்கு மலர்வணக்க நிகழ்வு இடம்பெற்றது. த.பு.க பிரான்ஸ் தலைவர் திரு. கோணேஸ்வரன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சோர்ந்த திரு. சுரேந்திரகுமார், ரான்சி நகரசபை உறுப்பினர் திரு. அலன் ஆனந்தன், தமிழ்ச்சங்கங்களின் சார்பில் திரு. டக்ளஸ், தமிழ்சோலை தலைமைப் பணிமனை சார்பில் திரு. அகிலன், வர்த்தக விளம்பர ஆதரவாளர்கள் சார்பில் ஜோலி ஜவ்னா உரிமையாளர் திரு. அருந்தவராஜா ஆகியோருடன் நாடுகடந்த அரச பிரதிநிதிகள், தமிழ்ச் சங்க உறுப்பினர்கள், பிரான்ஸ் நகரசபை உறுப்பினர்கள், நடனப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

வரவேற்புரையை நிகழ்த்திய த.பு.க பிரான்ஸ் தலைவர் திரு. கோணேஸ்வரன் அவர்கள் குறிப்பிடுகையில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ், தாய்நிலத்தில் புனர்வாழ்வுப் பணிகளை முன்னெடுத்து வந்த சமகாலத்தில் பிரான்ஸ் மண்ணிலும் சமூக முன்னேற்றப் பணிகளை முன்னெடுத்து வருகின்றது. அதாவது சமூக முன்னேற்ற ஆலோசனைகள், நேர்முக மொழிபெயர்ப்பு உதவிகள் மற்றும் நுண்கலை, நடனம், கல்வி போன்ற முன்னேற்ற போட்டி நிகழ்வுகளையும், தமிழர் விளையாட்டு விழா, கலை நிகழ்ச்சிகள், நினைவு வணக்க நிகழ்வுகள் போன்றவற்றையும் இங்கு வாழும் மக்களின் நலனுக்காக செயற்படுத்தி பணியாற்றி வருவதாக தெரிவித்த அவர் தொடர்ந்து கூறுகையில்

எமது கழகத்தால் முன்னெடுக்கப் பட்டுவரும் நிகழ்வுகளுக்கு வர்த்தக நிறுவனங்கள் வியாபார நோக்கோடும் சமூக நோக்கோடும் வழங்கும் விளம்பர ஆதரவு, சமூக ஆர்வலர்கள், கலாரசனையும் சமூகக் கரிசனையும் கொண்ட மக்களின் ஆதரவினாலும் மண்டப மற்றும் இதர செலவுகளையும் ஈடுசெய்கின்றோம்.

சில நிகழ்வுகளுக்கான முழுச்செலவையும் விளம்பர ஆதரவாலும் வருகைதரும் பார்வையாளர்களின் நுழைவு நன்கொடையாலும் ஈடுசெய்ய முடிவதில்லை. இருந்தும் சமூகத்தின் நன்மை கருதி தொடர்ந்தும் நடாத்தி வருகின்றோம் எனவும் தற்போதைய சூழ்நிலையில் இச்செயற்பாடுகளை நாம் நிறுத்தமுடியாது. இச்செயற்பாடுகளின் ஊடாக எமது இளைய தலைமுறையினரும், புதிதாக பிரான்ஸ் மண்ணில் அகதி தஞ்சம் கோரிய மக்களும், முதியவர்களும் பயன்பெற்று வருகின்றார்கள். எனவே எமது செயற்பாடுகளின் ஊடாக பயன்பெறும் மக்களின் நன்மை கருதி தொடர்ந்தும் ஆதரவு வழங்குமாறு அன்புடன் மக்களை வேண்டிக்கொண்டதுடன்,

இன்றைய பரதவிழா மூலம் கிடைக்கும் நிதி இலங்கையில் கிழக்கு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இலங்கை உள்ளூர் தொண்டு நிறுவனங்களின் ஊடாக வழங்க உள்ளோம் என்பதையும் அறியத்தருகின்றோம் எனவும் தெரிவித்தார்.

திருமதி. வேலுப்பிள்ளை பார்வதியம்மாளின் இரங்கல் உரையை த.பு.க பிரான்ஸ் கௌரவ உறுப்பினர் திரு. விநாயகமூர்த்தி அவர்கள் நிகழ்த்தினார். அவர் தெரிவிக்கையில் உலகத்தமிழினத்தின் அடையாளமான, தமிழினத்தின் பெருவீரனை, எம்தேசியத் தலைவனை தமிழினத்துக்காய் ஈன்று உவந்தழித்த தேசத்தின் பேரன்னை அவர்களின் இழப்பு எமக்கு மட்டுமல்ல உலகத்தமிழினத்திற்கே பேரிழப்பாகும். அன்னாரின் இழப்பால் துயருற்று நிற்க்கும் மக்களுடன் நாமும் துயரத்தை பகிர்ந்து கொள்வதாக தெரிவித்தார்.

21 நடன ஆசிரியர்களின் 38 நடனப் பள்ளிகளின் 400க்கு மேற்பட்ட மாணவ மாணவிகளுடன் ஆசிரிர்களும் இணைந்து மிகவும் சிறப்பாக நடனங்களை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டனியல் கொல்பேர்க், ஒபேவில்லியே நகரபிதா ஜாக் சல்வடோர், செவ்றோன் நகரபிதா ஸ்தெபன் கத்திஙோன், சென் சென்தெனி மாகான அவைத் தலைவர் ஸ்தெபன் துறுசெல், ஈல் சென்தெனி உதவி நகரபிதாக்கள் மற்றும் நகரமன்ற உறுப்பினர்களான, திரு. அந்தோனி ருசெல், திரு. புவனேந்திரராஜா, திரு. ரவிசங்கர், திருமதி. நகுலேஸ்வரி, திரு. அலன் ஆனந்தன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் திரு. அமிர்தீன் பாருக் இவர்களுடன் நாடுகடந்த தமிழீழ அரசின் உள்துறை அமைச்சர் திரு. நா. பாலச்சந்திரன் மற்றும் நாடுகடந்த அரச பிரதிநிதிகள், தமிழ்ச்சங்க பிரதிநிதிகள், வர்த்தகப் பிரமுகர்கள், எமது கழக கௌரவ உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் நடனமாடிய மாணவ மாணவிகள் மற்றும் நடன ஆசிரியர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர்.

நன்றியுரையில் செயலாளர் திரு. ரவீந்திரன் அவர்கள் தெரிவிக்கையில். இந்நிகழ்வு 11வது தடைவையாக சிறப்பாக நடைபெற பேராதரவு நல்கிய மணிகிறாம், அக்செஸ் பிறிண்ட், ஸ்டார் இன்டர்நெசனல், ஓசியன் இன்டியன், சிவா புரோப்பிறத்தே, ஜொலி ஜப்னா ஆகிய வர்த்தக நிறுவன உரிமையாளர்களுக்கும்,

பிரான்சில் உள்ள புகழ்பூத்த 21 நடன ஆசிரியர்களின் 40க்கு மேற்ப்பட்ட பள்ளிகளில் நடனம் பயிலும் 400க்கு மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி சபையோரை மகிழ்வித்தார்கள். அவர்களுக்கும், அவர்களை திறன்பட பயிற்றுவித்த நடன ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும்

இந்நிகழ்வில் ஒலி ஒளி சேவையை சளைக்காமல் 11 ஆண்டுகளாகவும் தொடர்ச்சியாக வழங்கி வருகின்ற திரு. அருளானந்தம் அவர்களுக்கும்,

தரமான காணொளிப் படப்பிடிப்பை மேற்கொண்ட தீபன் வீடியோ உரிமையாளர் திரு. பிரபா அவர்களுக்கும் அவரோடு உதவி நல்கிய உறுப்பினர்கள் அனைவருக்கும்

நிழல் படப்பிடிப்பை மேற்க்கொண்ட திரு. மணிவண்ணன் அவர்களுக்கும்

அரங்க அலங்காரத்தை மேற்க்கொண்ட பேபி பலூன் உரிமையாளர் திரு. பாக்கியநாதன் அவர்களுக்கும், பாரஊர்தியைத் தந்து உதவிய வி.எஸ்.கோ வர்த்தக நிறுவனத்திற்கும் மற்றும்

இந்நிகழ்வை சிறப்பாக தொகுத்து வழங்கிய அறிவுப்பாளினி செல்வி. காயத்திரி மற்றும் அறிவுப்பாளர் திரு. அருள்மொழித்தேவன் அவர்களுக்கும்,

இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற அனைத்து வழிகளிலும் தோழோடு தோழ் கொடுத்து கரம் கோர்த்த அனைவருக்கும் எமது கழக உறுப்பினர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார். தொடர்ந்தும் எமது மக்களுக்கான பணிகளைத் தொடர அனைவரது கரங்களையும் பற்றிக்கொள்கின்றோம் என்று கூறி முடித்தார்.

இந்நிகழ்வு மண்டபம் நிறைந்த மக்களுடன் இரவு 8.40க்கு நிறைவுபெற்றது.

நன்றி
வணக்கம்

ஒன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ்