தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - பிரான்ஸ்
முதற்பக்கம்
செய்திகள்
வெண்புறா
HDU
செயற்பாடுகள்
திட்டங்கள்
காப்பகம்
அறிக்கை
கட்டுரை
நேர்காணல்
காணொளிப்படம்
நிழற்படம்
எம்மைப்பற்றி
தொடர்புக்கு
எமது முகவரி
ORT France,
84 ,rue philippe de Girad,
75018 Paris, France.
Tél: 01 40 38 30 74
trofr@hotmail.com

உதவிசெய்ய

Par virement bancaire
Banque : Credit Lyonnais
63bis rue Daurémont
75018 Paris
Code Banque - 30002
Code Guichet - 00408
N° Compte - 0000005584F
Clé RIB - 10

 
 
 

7வது இராகசங்கமம் இசைத்திறன் போட்டி நிகழ்ச்சி

பத்திரிகைச் செய்தி
12.10.2014 பாரீஸ்

வாய்ப்பாட்டு மற்றும் நுண்கலை கற்கும் மாணவர்களின் கலைத்திறனை மேம்படுத்தி சிறந்த கலைஞர்களை உருவாக்கும் நல்நோக்கோடு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் ஆண்டு தோறும் நடாத்தி வரும் இராகசங்கமம் இசைத்திறன் போட்டி நிகழ்ச்சி 7வது தடவையாக 11.10.2014 சனிக்கிழமை கர்னாடக சங்கீதப் போட்டியும், 12-10-2014 ஞாயிறு திரையிசைப் பாடல் போட்டியுமாக இரண்டு நாடகள் புளோன் மெனில் (டுந டீடயnஉ ஆநளnடை) நகரசபையின் பாடசாலை மண்டபத்தில், பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.

முதல்நாள் நிகழ்வில் நிறைகுட வரவேற்பு விளக்குகளை நடன ஆசிரியை மஞ்சுளா இராஜலிங்கமும், வாயிலின் இசை ஆசிரியை கௌரி கணநாதனும் ஏற்றிவைத்தனர். அதனைத் தொடர்ந்து பொதுச்சுடரினை பேபி பலூன் உரிமையாளர் திரு. பாக்கியநாதன் அவர்கள் ஏற்றிவைத்தார். பின்பு தாயக விடுதலைக்காக போராடி வீரச்சாவை தழுவிக்கொண்ட மாவீரர்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்களாலும் போரினாலும் கொல்லப்பட்ட மக்களையும் நினவுகூர்ந்து அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது. மேடையில் வைக்கப்பட்டிருந்த மங்கள விளக்குகளை பிரதம நடுவர்களாக இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த திரு. காங்கேயன் அவர்களும், திருமதி. உமா அவர்களும் ஏற்றிவைத்தனர்.

தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமானது. இப்போட்டிகளுக்கு பக்கவாத்தியக் கலைஞர்களாக, மிருதங்க வித்துவான் திரு. அன்ரு, வயலின் பிரசாத், கடம் அர்யுன், மோர்சிங் நிதர்சன், கஞ்சிரா அனோஜன் ஆகியோர் கடமையாற்றினார்கள்.

கர்னாடகப் போட்டி சிகழ்ச்சிகள் இரவு 8.30 மணிக்கு நிறைவுபெற்றது.

12.10.2014 நாள்; நிகழ்வில், வரவேற்பு விளக்குகளை திரு. திருமதி. சுரேந்திரன் தம்பதிகள் ஏற்றிவைத்தனர். தொடர்ந்து பொதுச்சுடரினை தமிழர் புனர்வாழ்வுக் கழக பிரான்ஸ் பணிப்பாளர் திரு. சுந்தரவேல் அவர்கள் ஏற்றிவைத்தார் தொடர்ந்து அக வணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.

மங்கள விளக்குகளை புளோ மெனில் நகரபிதா திரு. தியேரி மெங்கோன், உதவிநகரபிதா திருமதி. கிறிஸ்தின் கொமேராஸ், ரான்சி மாநகரசபை உறுப்பினர் திரு. ஆலன் ஆனந்தன், புளோன் மெனில் மாநகரசபை உறுப்பினர் செல்வி. ஸ்தெபானி மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழக பிரான்ஸ் தலைவர் திரு. கோணேஸ்வரன், தமிழர் புனர்வாழ்வுக் கழக கௌரவ உறுப்பினர் திரு. விநாயகமூர்த்தி, நாடுகடந்த தமிழீழ அரசு உறுப்பினர் திரு. பாலச்சந்திரன், ஜி ரிவி பிரான்ஸ் இணைப்பாளர் திரு. குருபரன், போட்டோ மணி உரிமையளர் திரு. மணிவண்ணன் ஏற்றிவைத்தனர்.

இந்நிகழ்வுக்கு பின்னணி இசையினை பாரீஸ் சூப்பர் ரியுனர் இசைக்குழுவினர் வழங்கினர். அவ்விசைக்குழுவின் பாடகர் திரு. யோகேஸ்வரனின் பக்திப்பாடலுடன் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமானது.

போட்டியின் இடையில், லாக்கூர்நெவ் சிவனாலய பிரதம குரு திரு. சிவசுத குருக்கள் விழா சிறப்புற அனைவருக்கும் ஆசிகள் கூறி வாழ்த்துரை வழங்கினார்.

ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து இந்நிகழ்வில் மாணவர்களை பயிற்றுவித்து, போட்டிகளில் பங்குபெற வைத்தமைக்காக சங்கீத ஆசிரியை திருமதி. அம்பிகை பாலகுமார் அவர்கள் கௌரவிக்கப்பட்டார். அதேபோல் இசைக் கலைஞர்களும் நாடுவர்களும் கௌரவிக்கப்பட்டனர். அவர்களுக்கான கௌரவத்தை புளோ மெனில் நகரபிதா திரு. தியேரி மெங்கோன வழங்கி மான்பேற்றினார்.

அதனைத் தொடர்ந்து தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்த்த கலைஞர்கள், அறிஞர்கள் மற்றும் சாதனையாளர்களை கௌரவித்து மதிப்பளிக்கும் நோக்கோடு ஆண்டு தோறும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் ஈழத்தமிழ்விழி என்னும் சிறப்பு விருதினை வழங்கிவருகின்றது.

அந்த வகையில் திரு. வண்ணை தெய்வம் அவர்களின் சுமார் நாற்பத்தைந்து வருடகால கலை, இலக்கியப் பணியினை பாராட்டி தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் 'ஈழத்தமிழ்விழி' என்னும் உயர்ந்த கௌரவத்தை இவ்வாண்டு வழங்கி கௌரவித்தது.

இக்கௌரவிப்பில், அறிமுகஉரையை எஸ். கே. ராஜன் வழங்க, உறவுரையை பிரியாலயம் துரைஸ் அவர்கள் வழங்கினார். திரு. அருள்மொழித்தேவன் பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்க, திரு. விநாகயமூர்த்தி சந்தனமாலையினை அணிவித்தார். தொடர்ந்து, ஈழத்தமிழ்விழி விருதினை திரு. சுந்தரவேல் அவர்கள் வழங்கி கௌரவித்தார். சான்றிதளை திரு. கோணேஸ்வரன் அவர்கள் வழங்க திரு. ஜேயசூரியர் பதக்கத்தை அணிவித்து மான்பேற்றினார்., தொடர்ந்து ஏற்புரையை வண்ணை தெய்வம் அவர்கள் வழங்கினார்.

தொடர்ந்தும் போட்டிகள் நடைபெற்றது. இம்முறை சிறுவயது போட்டியாளர்கள் கூடுதலாகக் கலந்துகொண்டதால், 'அதிகீழ்ப்பிரிவு' என்னும் புதிய பிரிவு உருவாக்கப்பட்டு, 5 பிரிவுகளாக போட்டிகள் நடாத்தப்பட்டது. இப் போட்டிகளிலே 50கு மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். பங்குபற்றிய அனைத்துப் போட்டியாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவ்வருடமும் கலந்து கொண்ட அனைத்துப் போட்டியாளர்களிலும் இருந்து, கர்னாடக சங்கீதத்திலும், திரையிசையிலும் அதிகூடிய புள்ளிகளை பெற்ற செல்வி. சிவலோகநாதன் நிஷhங்கனி சிறப்புப் பாடகியாகத் தெரிவுசெய்யப்பட்டார். இவருக்கு பாரீஸ் பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் சார்பில் திரு. மகேந்திரன் அவர்கள் தங்கப் பதக்கம் வழங்கி கௌரவித்தார்.

இவ்விருநாள் போட்டிகளிலும் நடுவர்களாக புதுச்சேரியில் இருந்து வருகை தந்திருந்த திரு. காங்கேயன் மற்றும் திருமதி. உமா அவர்களும் கடமையாற்றியிருந்தனர்.

இரண்டாவது நாள் போட்டியின் ஒரு பகுதி ஜி ரிவி தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டுது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்விற்கான ஒலி அமைப்பினை அருள்சோனோ அருளானந்தம் அவர்களும், நிழ்ற்படப்பிடிப்பை போட்டோ மணி மணிவண்ணன் அவர்களும தீபன் போட்டோ குழுவினரும், அரங்க வடிவமைப்பை பேபி பலூன் குழுவினரும், காணொளிப் படப்பிடிப்பினை ஜி ரிவி தொலைக்காட்சிக் குழுவினரும், நிகழ்ச்சித்தொகுப்பினை திரு. அருள்மொழித்தேவன், திருமதி. உமா, திரு. கொலின்ஸ், திரு. சுதர்சன் மற்றும் பிரெஞ்சு மொழியில் செல்விகள் ஸ்தெபானி, தட்சாயினி ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.

மண்டபம் நிறைந்த மக்களோடு இரவு 10.30 மணிக்கு இந்நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

ராகசங்கமம் 2014 வெற்றிபெற்றவர்கள் விபரம்

அதி கீழ்ப்பிரிவு

சங்கீதப் பாடல்
1ம் இடம் : சுரேஸ்குமார் சாகித்தியன்
2ம் இடம் : யோகரஞ்சன் விலக்ஷனா
3ம் இடம் : சத்தியநாதன் சுபிட்ஷh

திரையிசைப் பாடல்
1ம் இடம் : சத்தியநாதன் அமலியா
2ம் இடம் : சுரேஸ்குமார் சாகித்தியன்
3ம் இடம் : யோகரஞ்சன் விலக்ஷனா

கீழ்ப்பிரிவு

சங்கீதப் பாடல்
1ம் இடம் : சிறீசுதேஸ்கரன் வருஷpனி
2ம் இடம் : ஜெயக்குமார் நிதுர்ஷh
3ம் இடம் : உதயகுலசிங்கம் உவனா

திரையிசைப் பாடல்
1ம் இடம் : நவநீதன் யாழவன்
2ம் இடம் : சிறீதரன் ஆரபி
3ம் இடம் : ஜெயக்குமார் நிதுர்ஷh ரூ உதயகுலசிங்கம் உவனர்

மத்தியபிரிவு

சங்கீதப் பாடல்
1ம் இடம் : திலீப்குமார் திசானிகா
2ம் இடம் : யோகரஞ்சன் விதுஷhயினி
3ம் இடம் : சிவNலூகநாதன் சயீர்த்தனா ரூ டிலீப்குமார் அக்ஷரா

திரையிசைப் பாடல்
1ம் இடம் : டிலீப்குமார் அக்ஷரா
2ம் இடம் : யோகரஞ்சன் விதுஷhயினி
3ம் இடம் : சிவானந்தராஜா ஆரபி ரூ டிலீப்குமார் திசானிகா

மேற்பிரிவு

சங்கீதப் பாடல்
1ம் இடம் : சிவலோகநாதன் நிஷhங்கனி
2ம் இடம் : சின்னத்தம்பி கார்த்தியாயினி
3ம் இடம் : வேலுப்பிள்ளை மயூரி ரூ சுகுமார் சுதாயினி

திரையிசைப் பாடல்
1ம் இடம் : சிவலோகநாதன் நிஷhங்கனி
2ம் இடம் : சுகுமார் சுதாயினி
3ம் இடம் : வேலுப்பிள்ளை மயூரி

அதிமேற்பிரிவு

சங்கீதப் பாடல்
1ம் இடம் : ரதி ஜெயாழன்
2ம் இடம் : மார்க் மாறன்

திரையிசைப் பாடல்
1ம் இடம் : மார்க் மாறன்
2ம் இடம் : செபஸ்தியன் சுசி
3ம் இடம் : ருத்தரமூர்த்தி ஜெயக்குமார்

ஓன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ