தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - பிரான்ஸ்
முதற்பக்கம்
செய்திகள்
வெண்புறா
HDU
செயற்பாடுகள்
திட்டங்கள்
காப்பகம்
அறிக்கை
கட்டுரை
நேர்காணல்
காணொளிப்படம்
நிழற்படம்
எம்மைப்பற்றி
தொடர்புக்கு
எமது முகவரி
ORT France,
84 ,rue philippe de Girad,
75018 Paris, France.
Tél: 01 40 38 30 74
trofr@hotmail.com

உதவிசெய்ய

Par virement bancaire
Banque : Credit Lyonnais
63bis rue Daurémont
75018 Paris
Code Banque - 30002
Code Guichet - 00408
N° Compte - 0000005584F
Clé RIB - 10

 
 
 


வாய்ப்பாட்டு மற்றும் நுண்கலை இசைத்திறன் போட்டி நிகழ்ச்சி ராகமாலிகா இராகசங்கமம் 2011
பத்திரிகைச்செய்தி
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ்
10-10-2011

வாய்ப்பாட்டு மற்றும் நுண்கலை கற்கும் மாணவர்களின் கலைத்திறனை மேம்படுத்தும் நோக்கோடு தமிழர் புனர்வாழ்வுக்கழம் பிரான்ஸ் ஆண்டு தோறும் நடாத்தி வரும் ராகமாலிகா, இராகசங்கமம் இசைத்திறன் போட்டி நிகழ்ச்சி 4வது தடவையாக 2011 ஒட்டோபர் 8ம் 9ம் திகதிகளில் (சனி ஞாயிறு) இலக்கம் 50 rue de Torcy 75018 Paris (Metro : Marx Dormoy) மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழீழ மக்களின் உரிமைக்காக போராடி வீழ்ந்த வீரமறவர்களையும், போரினாலும் இயற்கை அனர்த்தங்களாலும் சாவடைந்த மக்களையும் நினைவு கூர்ந்து அமைதிவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.

நாடுகடந்த தமிழீழ அரசு உள்துறை அமைச்சர் திரு. நாகலிங்கம் பாலச்சந்திரன், தமிழர் புனர்வாழ்வுக்கழக பிரான்ஸ் பணிப்பாளர் திரு.செ.சுந்தரவேல், தமிழர் புனர்வாழ்வுக்கழக பிரான்ஸ் தலைவர் திரு. த. கோணேஸ்வரன், லாக்கூர் நெவ் நகரசபை உறுப்பினர் திரு. அந்தோனி ரூசல், லாக்கூர் நெவ் சிவன்கோயில் பிரதமகுரு திரு. சிவசிறீ கணேச சிவசுதக்குருக்கள், மூர்த்த கலைஞர் ஈழத்தமிழ்விழி திரு. அப்புக்குட்டி ராஜகோபால், நாடக திரைப்பட இயக்குனர் ஈழத்தமிழ்விழி திரு. குமாரசாமி பரராசா, நாடுகடந்த அரசின் கல்விக் கலாச்சார உடல்நல அமைச்சின் செயலக பிரான்ஸ் பணிப்பாளரும் முன்னாள் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளருமான திரு. ச. மைக்கல் கொலின்ஸ், புங்குடுதீவு மக்கள் ஒன்றிய அறங்காவல உறுப்பினரும் பாரதி விளையாட்டுக்கழகத்தலைவருமான திரு.அழகன் திரு. விஸ்வநாதக்குருக்கள் கணேசன் ஆகியோர் மங்கள விளக்கினை ஏற்றிவைத்தனர்.

தென்னிந்தியாவில் இருந்து வருகைதந்த பிரபல பின்னணிப்பாடகர் திரு. தீபன்சக்கரவத்தி, ராகமாலிகா தயாரிப்பாளரும் இசைக்கலாநிதியுமான திரு. மணிமாறன் ஆகியோர் நடுவர்களாக கடமையாற்ற, தென்னிந்தியாவில் பல போட்டி நிகழ்ச்சிகளுக்கு இசைமீட்ட கலைஞர்களான பிரபல கீபோர்ட் வாத்தியக்கலைஞர் திரு. ஜெசுதாசன் சேவியர், தபேலா வாத்தியக்கலைஞர் திரு. ராதாகிருஷ;ணன் விக்ரம் ஆகியோருடன் பாரிஸ் சுப்பர் ரியூணர் இசைக்குழுவினரும் இணைந்து இசைத்திறன் போட்டியாளர்களுக்கு இசை வழங்கி சிறப்பித்தனர்.

நிகழ்வுக்கான சிறப்பு மலரை ரான்சி மாநகரசபை உறுப்பினரும், உலகத்தமிழர் பண்பாட்டியக்க பிரான்ஸ் தலைவருமான திரு. அலன் ஆனந்தன் அவர்கள் வெளியிட்டு வைக்க ஆதரவு வழங்கிய மணிக்கிராம் நிறுவனம், கராச் பிறிமியர், வி.எஸ்.கோ, மாலா மளிகை, சாயி காசன் கறி, தனலட்சுமி மகால், கிங்ஸ் ரவஸ், லாக்கூர் நெவ் காசன் கறி, அலுமந்தசியோன் - பெத்திக் கம்றோன், குறிஞ்சி அரிசி, அலோ தந்தூரி, கீர்த்தி பனான்னா சிப்ஸ், பேபி பலூன், அருள் சொனோ, மணிபோட்டோ, ஈறோப் வீடியோ, சுப்பர் ரியூணர் இசைக்குழு, ஜிரிவி, லாக்கூர்நெவ் சிவன் கோயில், அஸ்ட லட்சுமி தேவஸ்தானம், ஆகியவற்றின் நிர்வாகிகளும் மற்றும் நிறுவன உரிமையாளர்களும் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் தமிழுக்குப் பெருமை சேர்த்த கலைஞர்களை, அறிஞர்களை, சாதனையாளர்களை கௌரவித்து ஈழத்தமிழ்விழி என்னும் விருது வருடா வருடம் வழங்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இவ்வாண்டுக்கான மறைந்த கலைஞருக்கான விருதினை, நாடகக்கலைஞரான திரு. தம்பிமுத்து மயில்வாகனம் அவர்களுக்கும், வாழும் கலைஞர்களுக்கான விருதுகள் நாதஸ்வர வித்துவான் திரு. இராமநாதன் நந்தகோபன் அவர்களுக்கும், தவில் வித்துவான் திரு. சுந்தரம் இராமச்சந்திரன் அவர்களுக்கும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

மதிப்பளிப்பு தொகுப்புரையை ஆசிரியர் திரு. கனகசபை அரியரத்தினம் அவர்கள் வழங்கினார், சான்றிதழ், நினைவுச்சின்னம், கழகப்பதக்கம் ஆகியவற்றை திரு.சுந்தரவேல், திரு.கோணேஸ்வரன் இணைந்து வழங்கினர்.

இசைத்திறன் போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றியவர்கள், வெற்றி பெற்றவர்கள் ஆகியோருக்கான சான்றிதழ்கள், வெற்றிக்கேடயங்கள், கழகப்பதங்கள் நடுவர்களால் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.

ராகமாலிகா இராகசங்கமம் 2011 நிகழ்வில் வாய்ப்பாட்டு சங்கீதம், திரையிசைப்பாடல் போட்டிகளில் சிறந்த பாடகராக செல்வி கணேசன் ஐசானி அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார். அஸ்ட லட்சுமி தேவஸ்தானம் சார்பாக திரு.பிரம்மஸ்ரீ சர்வேஸ்வர ஹேரம்பநாதக் குருக்கள் தங்கப்பதக்கம் வழங்கி ஊக்குவித்தார்.

இந்நிகழ்வை திரு.அருள்மொழித்தேவன், திரு.பார்த்தீபன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

வெற்றிபெற்ற போட்டியார்கள் விபரம்

கீழ்ப்பிரிவு வயலின்

முதலாம் இடம் சிவானந்தராஜா ராம்
இரண்டாம் இடம் சிவானந்தம் சகானா
மூன்றாம் சிவானந்தம் சாரங்கன்

கீழ்ப்பிரிவு வாய்ப்பாட்டு சங்கீதம்

கணேசன் ஐய்சானி
இரண்டாம் இடம் சிறீதரன் ஆரபி
மூன்றாம் இடம் யோகரஞ்சன் விதுசணி
மூன்றாம் இடம் எட்வேர்ட் லுயிஸ் அனோஜினி

கீழ்ப்பிரிவு திரையிசைப்பாடல்

முதலாம் இடம் கணேசன் ஐசானி
இரண்டாம் இடம் சிறீதரன் ஆரபி
மூன்றாம் இடம் யோகரஞ்சன் விதுசணி
மூன்றாம் இடம் எட்வேர்ட் லுயிஸ் அனோஜினி
மூன்றாம் இடம் சிவகுணராசா கிரிசாந்

கீழ்ப்பிரிவு மிருதங்கம்

ஆறுதல் பரிசு கணாநந்தன் ரட்ணமகீபன்

மத்திய பிரிவு வயலின்

இரண்டாம் இடம் பரமேஸ்வரலிங்கம் சார்ள்ஸ்
மூன்றாம் இடம் ராஜேந்திரன் சியாமளன்

மத்திய பிரிவு வாய்ப்பாட்டு சங்கீதம்

முதலாம் இடம் நடராஜா காஜத்திரி
இரண்டாம் இடம் சகாதேவன் சிந்துஜா
மூன்றாம் இடம் சகாதேவன் பானுஜா

மத்திய பிரிவு திரையிசைப்பாடல்

முதலாம் இடம் நடராஜா காயத்திரி
இரண்டாம் இடம் சிவகுணராஜா சிந்துஜா
மூன்றாம் இடம் செல்லத்துரை ரேணுகா

மத்திய பிரிவு மிருதங்கம்

ஆறுதல் பரிசு ஜெயாளன் ஜெனோர்த்தன்
ஆறுதல் பரிசு வேலுப்பிள்ளை மயூரன்
ஆறுதல் பரிசு சீனிவாஸ் மயூரன்

மேற்பிரிவு வயலின்

முதலாம் இடம் பரமேஸ்வரலிங்கம் பிரசாத்
மூன்றாம் இடம் சிவபிள்ளை சுதாகர்

மேற்பிரிவு வாய்ப்பாட்டு சங்கீதம்

இரண்டாம் இடம் வேலுப்பிள்ளை மயூரி
மூன்றாம் இடம் ரவீந்திரன் அர்ஜின்

மேற்பிரிவு திரையிசைப்பாடல்

முதலாம் இடம் பாலசுப்பிரமணியம் அருட்பிரகாஸ்
மூன்றாம் இடம் ரவீந்திரன் அர்ஜின்

அதிமேற்பிரிவு மிருதங்கம்

ஆறுதல் பரிசு ரவிக்காந் திசேந்தினி

அதிமேற் பிரிவு வாய்ப்பாட்டு சங்கீதம்

முன்றாம் இடம் தங்கேஸ்வரன் ராசலட்சுமி
ஆறுதல் பரிசு மகாலிங்கம் நர்மதா
ஆறுதல் பரிசு தர்மகுலசிங்கம் கௌரிமலர்

அதிமேற்பிரிவு திரையிசைப்பாடல்

முதலாம் இடம் நாகேஸ்வரராவ் உமாதேவி
இரண்டாம் இடம் அருள்மோகன் தர்சினி
முன்றாம் இடம் கனகராஜ் கம்சன்

நன்றி

ஒன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ்