தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - பிரான்ஸ்
முதற்பக்கம்
செய்திகள்
வெண்புறா
HDU
செயற்பாடுகள்
திட்டங்கள்
காப்பகம்
அறிக்கை
கட்டுரை
நேர்காணல்
காணொளிப்படம்
நிழற்படம்
எம்மைப்பற்றி
தொடர்புக்கு
எமது முகவரி
ORT France,
84 ,rue philippe de Girad,
75018 Paris, France.
Tél: 01 40 38 30 74
trofr@hotmail.com

உதவிசெய்ய

Par virement bancaire
Banque : Credit Lyonnais
63bis rue Daurémont
75018 Paris
Code Banque - 30002
Code Guichet - 00408
N° Compte - 0000005584F
Clé RIB - 10

 
 
 

வாய்ப்பாட்டு மற்றும் நுண்கலை இசைத்திறன் போட்டி நிகழ்ச்சி 8-9 .10 . 2011
பத்திரிகைச்செய்தி
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ்
06-10-2011

வாய்ப்பாட்டு மற்றும் நுண்கலை கற்கும் மாணவர்களின் கலைத்திறனை மேம்படுத்தும் நோக்கோடு தமிழர் புனர்வாழ்வுக்கழம் பிரான்ஸ் ஆண்டு தோறும் நடாத்தி வரும் ராகமாலிகா, இராகசங்கமம் இசைத்திறன் போட்டி நிகழ்ச்சி 2011. ஒட்டோபர் 8ம் 9ம் திகதிகளில் (சனி ஞாயிறு) இலக்கம் 50 rue de Torcy 75018 Paris (Metro : Marx Dormoy) மண்டபத்தில் நடைபெறுகின்றது.

எமது கலைகள் அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டுமானால் இளம் தலைமுறைக்கு கலைகளை கற்பிக்கவேண்டும். கற்கின்ற மாணவர்களுக்கு பல மேடை நிகழ்வுகளை ஏற்பாடுசெய்து ஊக்குவிக்கவேண்டும். கலை ரசனையும்> சமூகக்கரிசனையும் கொண்ட மக்கள் பெரும்திரளாக வருகைதந்து சிறப்பிக்கவேண்டும் அப்பொழுதுதான் எமது கலைகள் தளைத்தோங்கும். அந்த வகையில் புலம் பெயர்ந்த மண்ணில் எமது அடுத்த தலைமுறையினர் தமிழ்க்கலைகளைக் கற்று தேர்ச்சி பெற்றவர்களாக திகழ்வதற்கு அனைத்து நல் உள்ளங்களும் ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து உறுதுணை வழங்கவேண்டுமென அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

கலைகளின் தாய்வீடான தென்னிந்தியாவில் இருந்து நடுவர்களாக திரு. தீபன்சக்கரவத்தி> திரு. மணிமாறன்> கீபோர்ட் வாத்தியக்கலைஞர் திரு. ஜெசுதாசன்> தபேலா வாத்தியக்கலைஞர் திரு. விக்ரம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இவர்களுடன் பாரிஸ் சுப்பர் ரியூணர் இசைக்குழுவினர் கலந்து இசை வழங்கி சிறப்பிக்கின்றனர்.

இந்நிகழ்வில் தமிழுக்குப் பெருமை சேர்த்த கலைஞர்களை> அறிஞர்களை> சாதனையாளர்களை கௌரவித்து ஈழத்தமிழ்விழி என்னும் விருதை வருடா வருடம் வழங்கி கௌரவித்து வருகின்றோம் அந்தவகையில் இவ்வாண்டு மறைந்த கலைஞருக்கான விருதினை> நாடகக்கலைஞரான திரு. தம்பிமுத்து மயில்வாகனம் அவர்களும்> வாழும் கலைஞர்களுக்கான விருதுகளை நாதஸ்வர வித்துவான் திரு. இராமநாதன் நந்தகோபன் அவர்களும்> தவில் வித்துவான் திரு. சுந்தரம் இராமச்சந்திரன் அவர்களும் பெற்றுக்கொள்ளுகின்றார்கள்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் சமூகத்தின் நன்மை கருதி செயற்படுத்தப்படும் இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நன்றி
ஒன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ்