தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - பிரான்ஸ்
முதற்பக்கம்
செய்திகள்
வெண்புறா
HDU
செயற்பாடுகள்
திட்டங்கள்
காப்பகம்
அறிக்கை
கட்டுரை
நேர்காணல்
காணொளிப்படம்
நிழற்படம்
எம்மைப்பற்றி
தொடர்புக்கு
எமது முகவரி
ORT France,
84 ,rue philippe de Girad,
75018 Paris, France.
Tél: 01 40 38 30 74
trofr@hotmail.com

உதவிசெய்ய

Par virement bancaire
Banque : Credit Lyonnais
63bis rue Daurémont
75018 Paris
Code Banque - 30002
Code Guichet - 00408
N° Compte - 0000005584F
Clé RIB - 10

 
 
 

5வது இராகசங்கமம் இசைத்திறன் போட்டி நிகழ்ச்சி
பத்திரிகைச் செய்தி
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ் 15-10-2012

வாய்ப்பாட்டு மற்றும் நுண்கலை கற்கும் மாணவர்களின் கலைத்திறனை மேம்படுத்தி சிறந்த கலைஞர்களை உருவாக்கும் நல்நோக்கோடு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் ஆண்டு தோறும் நடாத்தி வரும் இராகசங்கமம் இசைத்திறன் போடடி நிகழச்;சி 5வது தடவையாக 14.10.2012 ஞாயிறு அன்று, செவ்றோன் நகரசபை மண்டபத்தில், பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.

தமிழர் பண்பாட்டு வடிவமான வரவேற்பு நிறைகுட விளக்குகளை தமிழர் புனர்வாழ்வுக் கழக கௌரவ உறுப்பினர் திரு. விநாயகமூர்த்தி தம்பதிகள் ஏற்றிவைத்தனர். அனைத்து மாவீரர்களையும் நினைவுகூர்ந்து பொதுச்சுடரினை மேஜர் அரி அவர்களின் சகோதரன் திரு. றமேஸ் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத்தொடர்ந்து தாயக விடுதலைக்காக போராடி வீரச்சாவை தழுவிக்கொண்ட மாவீரர்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்களாலும் போரினாலும் கொல்லப்பட்ட மக்களையும் நினவுகூர்நது அமைதி வணக்கம் செலுத்தப்பட்டு மங்கள விளக்குகள் ஏற்றப்பட்டன. மங்கள விளக்குகளை ரான்சி நகரமன்ற உறுப்பினரும், உலகத்தமிழ்ப் பண்பாடடு இயக்க பிரான்ஸ் தலைவருமான. திரு. அலன் ஆனந்தன,; நாடுகடந்த தமிழீழ அரசு அகதிகள் விவகார அமைச்சர் திரு. மகிநத்ன், லாக்கூர்நெவ் சிவன் ஆலய பிரதம குரு திரு. சிவசுதக்குருக்கள், நாடுகடந்த தமிழீழ அரசவை உறுப்பினரும் தொழில் அதிபருமான திரு. நா. பாலச்சந்திரன், மொழிபெயர்ப்பாளர் திருமதி. தர்மினி, வேல்நெற் கொம் வர்த்தக உரிமையாளர் திரு. பக்திவேல், சுஷp தந்தூரி உரிமையாளர் திரு. பாலகுமார் ஆகியோர் ஏற்றிவைத்தனர்.

லாக்கூர்நெவ் சிவன் ஆலய பிரதம குரு திரு. சிவசுதக்குருக்கள் விழா சிறப்புற அனைவருக்கும் ஆசிகள் கூறி வாழத் து; ரை வழங்கினார். அதனைத்தொடர்ந்து இசைத்திறன் போட்டி நிகழ்வு ஆரம்பமாகியது. ஜேர்மனி போல்ன் மாநகரில் இருந்து இசை மாமணி, குறள் இசைச் செல்வர் திரு. மாணிக்கம் யோகேஸ்வரன், ஸ்டறர்ஸ்பேர்க் நகரில் இருந்து கலாநிதி திருமதி. இராஜராஜேஸ்வரி பரி, பாரிஸ் மாநகரில் இருந்து வயலின் நுண்கலைமாணி, கலாவித்தகர் திருமதி தர்மிகா முரளிதரன் ஆகியோர் நடுவர்களாக கடமையாற்ற நாற்பதுக்கு மேற்பட்ட போட்டியாளர்கள் தோற்றி தமது இசைத்திறனை பரீட்சித்தார்கள். இந்நிகழ்வுக்கு சிறபபு; நடுவராக தமிழகத்திலிருந்து பிரபல இசையமைப்பாளரும், இயக்குனரும், பாடகருமான திரு. கங்கை அமரன் அவர்கள் கலந்துகொள்வதாக ஏற்பாடாகியிருந்தது.
தவிர்க்கமுடியாத காரணத்தால் அவர் கலந்துகொள்ளவில்லை. அதையிட்டு வருந்துவதாக தொலைபேசி ஊடாக விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு தெரியப்படுத்தினாh.; நிச்சயம் அனைவரையும் வந்து சந்திப்பேன் எனவும் தெரிவித்தார்.

தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்த்த கலைஞர்கள், அறிஞர்கள் மற்றும் சாதனையாளர்களை கௌரவித்து மதிப்பளிக்கும் நோக்கோடு ஆண்டு தோறும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் ஈழத்தமிழ்விழி என்னும் சிறப்பு விருதினை இருவருக்கு வழங்கிவருகின்றது. அந்தவகையில் மறைந்த கலைஞருக்கான ஈழத்தமிழ்விழி விருது அமரர் 'சங்கதீ பூசணம்' திரு. எம். ஏ. குலசீலநாதன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. விருதினை திருமதி குலசீலநாதன் மற்றும் பிள்ளைகள் மருமக்கள் வருகைதந்து பெற்றுக்கொண்டனர். திருமதி குலசீலநாதனுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர் திருமதி சந்திரிக்கா தேவராஜா அவர்கள் பொன்னாடை போர்த்து மதிப்பளிக்க, அமரர் குலசீலநாதன் அவர்களுக்கான விருதினையும் சான்றிதழையும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தலைவர் திரு. கோணேஸ்வரன் அவர்கள் வழங்கி மான்பேற்றினார். வாழும் கலைஞருக்கான ஈழத்தமிழ்விழி விருது வயலின் வித்துவான் திருமதி. கோமளா கந்தையா அவர்களுக்கு வழங்கப்பட்டது. திருமதி. கோமளா கந்தையா அவர்களுக்கு, திருமதி இராஜராஜேஸ்வரி பொன்னாடை போர்த்து மதிப்பளிக்க, திரு. மாணிக்கம் யோகேஸ்வரன் அவர்கள் சான்றிதழை வழங்கி கௌரவிக்க, ஈழத்தமிழ்விழி விருதினை தமிழர் புனர்வாழ்வுக் கழக கௌரவ உறுப்பினர் திரு. விநாயகமூர்த்தி அவர்கள் வழங்கி மான்பேற்றினார். விழாவின் சிறப்பு மலரை தொழில் அதிபர் நா. பாலச்சந்திரன் வெளியிட்டு வைக்க ரான்சி நகரமன்ற உறுப்பினர் திரு. அலன் ஆனந்தன் பெற்றுக்கொண்டார்.

இவ்விழா அரங்கிலே தென்னிந்திய இசையமைப்பாளர் திரு. சியாம் அவர்களின் இசையில் உருவான இரண்டு இசைத்தட்டுக்கள் வெளியிட்டு வைக்கப்பட்டது. பாம்பன் சுவாமிகள் அருளிய கந்த கவசம் இசைத்தட்டை திரு. கோணேஸ்வரன் அவர்கள் வெளியிட்டு வைக்க சிவன் ஆலய பிரதம குரு திரு. சிவசுதக்குருக்கள் அவர்கள் பெற்றுக்கொண்டார். தவப்புதல்வன் இறுவெட்டு தமிழா ; புனர்வாழ்வுக் கழக பிரான்ஸ் பணிப்பாளர் திரு. செ. சுந்தரவேல் அவர்கள் வெளியிட்டு வைக்க, தமிழர் நடுவக பிரதிநிதி திரு. அமுதன் அவர்கள் பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து வர்த்தக பிரமுகர்கள் சமூகபிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் பெற்றுக்கொண்டனர். இசை ஆசிரியர்கள், பங்காற்றிய கலைஞர்கள் மதிப்பளிக்கப்பட்டனர். இவர்களுக்கான மதிப்பளிப்பை நடுவர்கள் வழங்கி சிறப்பித்தனர். நடுவர்களுக்கான மதிப்பளிப்பை கழகப் பணிப்பாளர் வழங்கி கௌரவித்தார். அதனைத்தொடர்ந்து கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு சான்றிதழ்களும், வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கு சான்றிதழ்களும் வெற்றிக்கிண்ணங்களும் நடுவர்களால் வழங்கி உற்சாகப்படுத்தப்பட்டனர். 5வது இராகசங்கமம் இசைத்திறன் போட்டி நிகழ்ச்சியில் சகல பிரிவுகளிலும் இருந்து, சங்தீதப் பாடல், சினிமாப் பாடல் என இரண்டு போட்டிகளிலும் பங்குபற்றிய போட்டியாளர்களில் சிறந்த பாடகராக தெரிவு செய்யப்பட்ட. செல்வி காயத்திரி நடராஜா அவர்களுக்கான தங்க மாலையை, அஸ்டலட்சுமி தேவஸ்தான குருக்கள் திரு திருமதி ஏரம்பநாதக் குரக்கள் இருவரும் இணைந்து தங்கள் பேரால் பரிசாக வழங்கி ஊக்கப்படுத்தினர்

பிரான்சில் புகழ்பெற்ற திரு. ஞானா அவர்களின் சுப்பர் ரியூனர் இசைக்குழுவினர் போட்டிப் பாடல்களுக்கு இசை மீட்டனர். இவர்களுடன் வயலின், மிருதங்க கலைஞர்களான பரமலிங்கம் செந்தில,; பாலகுமாh ; சகோதரர்கள் கர்நாடக சங்கீத பாடல்களுக்கு பக்கவாத்தியம் வழங்கினர். அருள் சொனோ ஒலியமைப்பை மேற்கொள்ள, காணொளி படப்பிடிப்பை ஈறோப் வீடியோ பாலா குழுவினர் பதிவாக்கினர், நிழற்படப்பிடிப்பை திரு. செந்தூரன் ராகுலன் மற்றும் தமிழ்கண் டிநோத் ஆகியோர் பதிவாக்கினர். அரங்க வடிவமைப்பை பேபி பலூன் குழுவினர் முன்னெடுத்தனர். நிகழ்ச்சி தொகுப்பினை திரு. அருள்மொழித்தேவன், திரு. கொலின்ஸ், திரு. லோகதாஸ், செல்வி ரொஸ்லின் ஆகியோர் தொகுத்து வழங்கினர் நூற்றுக்கணக்கான மக்களுடன் நிகழ்வு இரவு 10.30 மணிக்கு இனிதே நிறைவுற்றது.

2012 இராகசங்கமம் நிகழ்வில் வெற்றிபெற்ற போட்டியாளர்கள் விபரம்

கீழ்ப்பிரிவு

வாய்ப்பாட்டு சங்கீதம்
· 1ம் இடம் : கணேசன் ஜனனி
· 2ம் இடம் : சிறீதரன் ஆரபி
· 3ம் இடம் : தர்மகுலசிங்கம் ஆரணி

திரையிசைப் பாடல்

· 1ம் இடம் : கணேசன் ஐனனி, சிறீதரன் ஆரபி
· 2ம் இடம் : சிவானந்தராஜா ராம்
· 3ம் இடம் : சிவானந்தராஜா குந்தவி

மத்திய பிரிவு
வாய்ப்பாட்டு சங்கீதம்
· 1ம் இடம் : யோகரஞ்சன் விதுசானி
· 2ம் இடம் : நடராஜா காயத்திரி
· 3ம் இடம் : சகாதேவன் சிந்துஜா

திரையிசைப் பாடல்
· 1ம் இடம் : சகாதேவன் பானுஜா, சிவகுணராஜா நேர்த்திகா
· 2ம் இடம் : நடராஜா காயத்திரி
· 3ம் இடம் : சகாதேவன் சிந்துஜா

மேற்பிரிவு

வாய்ப்பாட்டு சங்கீதம்
· 1ம் இடம் : பாலசுப்பிரமணியம் அருண்பிரகாஸ்
· 2ம் இடம் : வேலுப்பிள்ளை மயூரி

திரையிசைப் பாடல்
· 1ம் இடம் : சிவபாதம் மெலானி
· 2ம் இடம் : ரவீந்திரன் அலன்
· 3ம் இடம் : வேலுப்பிள்ளை மயூரி

அதிமேற்பிரிவு

வாய்ப்பாட்டு சங்கீதம்
· 1ம் இடம் : அருள்மோகன் தர்சினி

திரையிசைப் பாடல்
· 1ம் இடம் : நாகேஸ்வரராவ் உமாதேவி
· 2ம் இடம் : வேளாங்கனி மொனிகா ரெமோன்
· 3ம் இடம் : அருள்மோகன் தர்சினி

நன்றி
ஒன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ்