தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - பிரான்ஸ்
முதற்பக்கம்
செய்திகள்
வெண்புறா
HDU
செயற்பாடுகள்
திட்டங்கள்
காப்பகம்
அறிக்கை
கட்டுரை
நேர்காணல்
காணொளிப்படம்
நிழற்படம்
எம்மைப்பற்றி
தொடர்புக்கு
எமது முகவரி
ORT France,
26,rue du Département,
75018 Paris,
France.
Tél: 01 40 38 30 74
Fax: 01 53 26 09 77
trofr@hotmail.com

உதவிசெய்ய

Par virement bancaire
Banque : Credit Lyonnais
63bis rue Daurémont
75018 Paris
Code Banque - 30002
Code Guichet - 00408
N° Compte - 0000005584F
Clé RIB - 10

 
 
 

பத்திரிகைச் செய்தி
30 யூன் 2011

ஞாயிறன்று - பிரான்சில் 14வது தமிழர் விளையாட்டுவிழா:
ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகளாய்; ஒன்றுகூடும் பெருநிகழ்வு – வாரீர்!

பாரிசின் மிகப்பெரிய பூங்கா – மைதானமான லு புசே (Le Bourget) பூங்காவில் பல்லாயிரக்கணக்கில் தமிழ்மக்கள் ஒன்றுகூடி – ஒருதாய் பிள்ளைகளாய் முழு நாள் பொழுதைக்கழிக்கும் மாபெரும் தமிழர் விளையாட்டுவிழா 14வது தடவையாக எதிர்வரும் 03.07.2011 ஞாயிறன்று நிகழவுள்ளது.

தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தினாலும், உலகத்தமிழர் பண்பாட்;டு இயக்கம் பிரான்சினாலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் பிரான்சின் முக்கிய பாரளுமன்ற உறுப்பினர்கள், நகரபிதாக்கள், நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்கட்சிப் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

நிகழ்வின் ஆரம்பநிகழ்வாக உரிமைப்போரில் கொல்லப்பட்;ட பொதுமக்களுக்கும், போராளிகளுக்கும் வணக்கம் செலுத்தும் அரங்கம் திறந்து வைக்கப்படும். பல்வேறு தமிழர் சமூக அமைப்புக்களினதும், வர்த்தக அமைப்புக்களினதும் அரங்ககங்கள் மைதானம் பூராவும் அமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் இளையதலைமுறையினர் அறிந்திராத பாரம்பரிய தமிழர் விளையாட்டுக்களான கிளித்தட்டு, சங்கீதக்கதிரை, முட்டியுடைத்தல், தலையணைச்சண்டை, கயிறுழுத்தல், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற விளையாட்டுக்களுடன், கரப்பந்தாட்டம், இன்னும் பல வேடிக்கை வினோத விளையாட்டுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உதைப்பந்தாட்டம், கிரிக்கட் விளையாட்டுக்களில் வெற்றி பெற்ற கழகங்களுக்கான பரிசளிப்பும் இடம்பெறவுள்ளது.

பூங்காவில் சிறப்பாக அமைக்கப்பட்ட உணவுசாலையில் பாரம்பரிய உணவுவகைகளான கூழ், கொத்துறொட்டி உட்பட பலவகை அறுசுவை உணவுகளும் சுடச்சுட தயாரித்து விநியோகிக்கப்படவுள்ளது.

மாலைநேர சிறப்பு நிகழ்வுகளாக தற்காப்புக்கலை பயிற்சி - முயசயவé னéஅழளெவசயவழைnஇ இசை மற்றும் நடன, நாடக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நவீன மேலைத்தேய நடனங்கள் தொடக்கம் மரபுவழி நடனங்கள், இசை மற்றும் வானம்பாடி நிகழ்வில் பங்கேற்ற திறமையான கலைஞர்களின் இசை எனப்பல்சுவை நிகழ்வுகளும் மாலைப்பொழுதை மயக்கவுள்ளது.

பிரான்ஸ் இளம் தமிழ் தலைமுறைக்கும், மூத்த தலைமுறைக்கும் இடையேயான பண்பாட்டு கைகோர்ப்பாக அமையவுள்ள இந்த நிகழ்வு 1998 முதல் ஆண்டுதோறும் சிறப்புற நடந்தேறிவருகின்றது. இம்முறையும் பல வர்த்தக பெருந்தகைகள், ரிவி உட்பட ஊடக அனுசரணையாளர்களுடன் இணைந்து தமிழர் புனர்வாழ்வுக்கழகமும், உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கமும் இந்நிகழ்வு சிறப்புற உழைக்கின்றது.

அனைத்து பிரான்சு வாழ் தமிழ் சமூகமும் ஒன்றுதிரண்டு மைதானத்திற்கு வந்து ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகள் நாம் என்பதை உலகிற்கு பறைசாற்றுவோம். வாரீர்!.

கரப்பந்தாட்டம், கபடி, கிளித்தட்டு மற்றும் குழு விளையாட்டுக்களில் பங்குபற்றவிரும்புபவர்கள் நேரடியாக மைதானத்தில் அமைக்கப்படும் விளையாட்டு ஒருங்கிணைப்பு மையத்தில் பெயர்களைப்பதிவு செய்யவும்.

சிறுவர்களுக்கான ஓவியம் மற்றும் பலவித போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் சிறுவர்களின் பெற்றோர்கள் சிறுவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அரங்கில் பெயர்களைப் பதிவு செய்யலாம்.

சிறுவர்களுக்கான சிறப்பு விளையாட்டு அரங்கில் சிறுவர்களை விட்டுவிட்டு பெற்றோர் தமது விளையாட்டு மற்றும் கலை ஆர்வங்களில் பங்குபற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இசைநிகழ்வில் கலந்து கொண்டு பாட விரும்புவோர் கலைப்பகுதி அரங்கில் பெயர்களைப் பதிவு செய்யவும்.

சுமார் 50வகைப் போட்டிகளும், நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதால் இயலுமானஅளவு நேரத்துடன் அனைவரையும் அரங்கிற்கு வருமாறு விளையாட்டு மற்றும் சிறுவர் பகுதிப் பணிமனைகள் கோருகின்றன.

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்
உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ்
தொடர்புகட்கு: 01 40 38 30 74
நன்றி