தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - பிரான்ஸ்
முதற்பக்கம்
செய்திகள்
வெண்புறா
HDU
செயற்பாடுகள்
திட்டங்கள்
காப்பகம்
அறிக்கை
கட்டுரை
நேர்காணல்
காணொளிப்படம்
நிழற்படம்
எம்மைப்பற்றி
தொடர்புக்கு
எமது முகவரி
ORT France,
26,rue du Département,
75018 Paris,
France.
Tél: 01 40 38 30 74
Fax: 01 53 26 09 77
trofr@hotmail.com

உதவிசெய்ய

Par virement bancaire
Banque : Credit Lyonnais
63bis rue Daurémont
75018 Paris
Code Banque - 30002
Code Guichet - 00408
N° Compte - 0000005584F
Clé RIB - 10

 
 
 

பத்திரிகைச் செய்தி
04-07-2011 பாரீஸ்

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தாலும், உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கத்தாலும் நடாத்தப்படும் தமிழர் விளையாட்டு விழா 03-07-2011 அன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.

பொதுச்சுடர் ஏற்றல், அகவணக்கத்துடன் நிகழ்வை கௌரவ உறுப்பினர் திரு. விநாயகமூர்த்தி (தமிழர் புனர்வாழ்வுக் கழகம்) ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட seine saint Denis பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரு மான திருமதி. Marie George BUFFET, மாநகரசபை உறுப்பினர்கள் திரு. Anthony Russel, திரு.அருளானந்தம் புவனேஸ்வரராஜா, நாடுகடந்த தமிழீழ அரசின் உள்த்துறை அமைச்சர் திரு. நாகலிங்கம் பாலச்சந்திரன், திருமதி. குருபரன் சுபாசினி, திரு. மகிந்தன் சிவசுப்பிரமணியம், திரு. சுதர்சன் சிவகுருநாதன் (சுதன்ராஜ்) ஆகியோர் பங்கேற்றுக்கொண்டனர்.

விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களான திருமதி. Marie George BUFFET அவர்களுடன் Dugny மாநகர உறுப்பினர் திரு. Michel DELPLACE ஆகியோருடன் தமிழர் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் வர்த்தகப் பெருமக்கள், வருகை தந்த முக்கிய பிரமுகர்கள் அனைவரையும் விளையாட்டுத் திடலுக்கு மங்கள வாத்தியத்துடன் அழைத்துச்செல்லப்பட்டு அங்கு கொடியேற்றும் வைபவம் இடம்பெற்றது.

பிரான்ஸ் தேசியைக் கொடியை திருமதி. Marie George BUFFET யும், தமிழர் புனர்வாழ்வுக் கழகக் கொடியை கழகத்தின் உபதலைவராகிய திரு. முத்தையா கருணைராஜனும், ஐரோப்பிய ஒன்றிய கொடியை உலகத் தமிழர் பண்பாட்டு இயக்க தலைவரும் Drancy மாநகரசபை உறுப்பினருமாகிய திரு. அலன் ஆனந்தன் ஏற்றிவைத்தனர்.

அதன் பின் வழமைபோல விளையாட்டுக்கள் ஆரம்பமானது. இந் நிகழ்வுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினதும், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தினதும் அழைப்பை ஏற்று பல்லாயிரக்கணக்கான மக்களும், பல பாராளுமன்ற உறுப்பினர்களும், மாநகர முதல்வர்களும், மாநகரசபை உறுப்பினர்களும், பிராந்திய தலைவர்களும், தொழிற்சங்கவாதிகளும் வேறு சமூக அமைப்புக்களையும் சேர்ந்த பலர் இவ்விழாவில் பங்கேற்றுக் கொண்டனர்.

இவ்விழாவில் பங்குபற்றி, வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கான வெற்றிக் கிண்ணங்களும், மெடல்களும், வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் வர்த்தகப் பெருமக்கள், எமது கழக உறுப்பினர்கள், விளையாட்டுக்களை நெறிப்படுத்திய நெறியாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் வழங்கி சிறப்பித்தனர்.

இவ்விழாவில் முக்கிய உறுப்பினர்களாக கலந்து கொண்ட பிரமுகர்களின் விபரங்கள் வருமாறு:

* திரு. Daniel Goldberg பாராளுமன்ற உறுப்பினர் Seine Saint Denis

* திரு. Jean Christophe Lagarde பாராளுமன்ற துணை சபாநாயகர் – பிரான்ஸ், மாநகர முதல்வர் Drancy

* திரு. Jacques Salvador மாநகர முதல்வர் Aubervillers

* திரு. Stéphane Troussel உதவித்தலைவர் பிராந்தியசபை Seine Saint Denis

* திரு. Jean-Luc Millard உதவி முதல்வர் Drancy

* திரு. Anthony Russel மாநகரசபை உறுப்பினர் La courneuve

* திரு. அருளானந்தம் புவனேஸ்வரராஜா மாநகரசபை உறுப்பினர் La courneuve

* திரு. Rémy Frey தொழிற்சங்கம் Cgt

* திரு. Thomas Vigot மாநகரசபை Aubervillers

* திருமதி. நகுலேஸ்வரி அரியரத்தினம் மாநகரசபை உறுப்பினர் Clichy-sous bois

* திரு. முருகானந்தபிள்ளை ரவிசங்கர் மாநகரசபை உறுப்பினர் L'ile saint Denis

* செல்வி. Griselda Michel ஆசிரியை (தொழிற்சங்கம் Snes) உலக சோசலிய இயக்கம்.

* திரு. Loic Geffrotin மாணவர் அமைப்பு (SEUL) உலக சோசலியஇயக்கம்

* திரு. Hugues Montano அமைப்பு (SEUL) உலக சோசலிய இயக்கம்

* செல்வி. Garlone Lajonie ஆசிரியை (தொழிற்சங்கம்Snes) உலக சோசலிய இயக்கம்

குறிப்பு

இவ்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.Marie George BUFFET அவர்களால் இலங்கையில் தமிழர்களுக்கு நிகழ்ந்த மனிதஉரிமை மீறல்களை மேற்கொண்டவர்களை உலக நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்ற பிரேரணையை முன்வைத்து, இப் பிரேரணைக்கு சகல பிரான்சு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.இவ் அழைப்புக்கான துண்டுப்பிரசுரமும் இந் நிகழ்வில் விநியோகிக்கப்பட்டது.

வர்த்தகப் பெருமக்கள், தமிழ் அமைப்புக்கள், சமூக ஆர்வலர்கள், எமது கழகத் தொண்டர்கள், கலைஞர்கள், விளையாட்டுக் கழகங்கள், விளையாட்டு நடத்துனர்கள், அருள்சொனொ, ஈரோப் வீடியோ, பேபி பலூன், புகைப்படப் பிடிப்பாளர்கள், ஜிரிவி தொலைக்காட்சி மற்றும் வானொலிகள், இணையத்தளங்கள், விழாவிற்காக இணைந்து கொண்ட தொண்டர்களின் பேராதரவுடனும் பிரான்ஸ் காவல்த்துறை, தனியார் பாதுகாப்பு நிறுவனப் பணியாளர்கள், முதலுதவி பணியாளர்கள் (Protection Civile) ஆகியோரின் சேவையுடன் மற்றும் வருகை தந்த பெருந்திரளான மக்களின் நல்லாதரவுடனும் 14வது தமிழர் விளையாட்டு விழா மிகவும் சிறப்பாக Parc Départemental de La Courneuve – L’Aire des Vents Dugny மைதானத்தில் நடைபெற்றது.

விழாவிற்கான நுழைவுச் சீட்டுக்கள் லைக்கா மொபைல் ஆதரவில் நல்வாய்ப்பு பார்க்கப்பட்டு வெற்றி பெற்ற இலக்கங்கள் :

1வது : 000885 ஸ்கூட்டர்

10 ஆறுதல் பரிசுகளாக தொலைபேசி மற்றும் லைக்கா சிம் அட்டை உள்ளடங்கிய பொதி

1. 000621

2. 002818

3. 002204

4. 001298

5. 002819

6. 000213

7. 001654

8. 000112

9. 004209

10. 002131

இவ்விழா இரவு 10 மணிக்கு இனிதே நிறைவுபெற்றது.

ஒன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - பிரான்ஸ்