தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்;ஸ் ஓபேவில்லியே நகரசசை பிரான்ஸ் இணைந்து ஏற்பாடு செய்த, சுனாமி ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களின் ஐந்தாம் ஆண்டு நினைவுகூரல்; ஓபேவில்லியே நகரமண்டபத்தில் 26.12.2009 நடைபெற்றது.
26-12--2009 தமிழர் புனர்வாழ்வுக் கழகம் -பிரான்ஸ்

மாலை ஐந்து முப்பது மணிக்கு ஆரம்பமாகியது. தமிழர் புனர்வாழ்வுக் கழக பிரான்ஸ் பொறுப்பாளர் திரு. சுந்தரவேல் அவர்கள் பொதுச்சுடரை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து போரினாலும் இயற்கை அனர்த்தங்களாலும் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூர்ந்து அமைதிவணக்கம் செலுத்தப்பட்டது. லாக்கூhர்நெவ் நகரமன்ற உறுப்பினர் திரு அமீர்தீன் பாரூக், தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தலைவர் திரு. நாகலிங்கம் பாலச்சந்திரன், தமிழர் புனர்வாழ்வுக் கழக கௌரவ உறுப்பினர் திரு. விநாயகமூர்த்தி ஆகியோர் ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களுக்கான சுடர்களை ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தி ஆரம்பித்து வைக்க சமூக பிரதிநிதிகள், தமிழ்ச்சங்க பிரதிநிதிகள் மக்கள் அனைவரும் வணக்கம்செலுத்தினர். தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தலைவர், லாக்கூhர்நெவ் நகரமன்ற உறுப்பினர் ஆகியோர் நினைவுரைகளை நிகழ்த்தினர். செவ்றோன், ஓன்லி சூ புவா தமிழ்ச்சோலை மாணவர்களின் நடனங்களும் இடம்பெற்றது. மாலை ஏழு மணிக்கு நினைவு வணக்க நிகழ்வு நிறைவு பெற்றது.













|