தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - பிரான்ஸ்
முதற்பக்கம்
செய்திகள்
வெண்புறா
HDU
செயற்பாடுகள்
திட்டங்கள்
காப்பகம்
அறிக்கை
கட்டுரை
நேர்காணல்
காணொளிப்படம்
நிழற்படம்
எம்மைப்பற்றி
தொடர்புக்கு
எமது முகவரி
ORT France,
26,rue du Département,
75018 Paris,
France.
Tél: 01 40 38 30 74
Fax: 01 53 26 09 77
trofr@hotmail.com

உதவிசெய்ய

Par virement bancaire
Banque : Credit Lyonnais
63bis rue Daurémont
75018 Paris
Code Banque - 30002
Code Guichet - 00408
N° Compte - 0000005584F
Clé RIB - 10

 
 
 

பத்திரிகைச் செய்தி
04-10-2010

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் 3வது தடைவயாக நடாத்திய 'ராகமாலிகா' இராகசங்கமம் நிகழ்வு 03-10-2010 Bourse de Travail - Porte de Paris மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

பிற்பகல் 2 மணிக்கு திரு. திருமதி. கேரம்பநாத குருக்கள் (அஷ;டலக்ஷ;மி தேவஸ்தானம்), திருமதி. வசந்தி சுரேந்திரகுமார் (செந்தெனிஸ் தமிழ்ச்சோலை நிர்வாகி), திரு. திருமதி. பரமானந்தம் (தனலக்ஷ;மி மகால்), திரு. நா. பாலச்சந்திரன் (நாடுகடந்த பாராளுமன்ற உறுப்பினர்), திரு. த. விநாயகமூர்த்தி (த.பு.க பிரான்ஸ் கௌரவ உறுப்பினர்), ஆகியோர் மங்கள விளக்கினை ஏற்றிவைத்தனர். அதனைத் தொடர்ந்து எமது தாயக மீட்புக்காக போராடி உயிர்நீர்த்த போராளிகள் மற்றும் போரினாலும் இயற்கை அனர்த்தங்களாலும் சாவடைந்த மக்களையும் நினைவுகூர்ந்து அமைதிவணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழர் புனர்வாழ்வுக் கழக பிரான்ஸ் தலைவர் தர்மலிங்கம் கோணேஸ்வரன் அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகி நடைபெற்றது.

தென்னிந்திய தொலைகாட்சிப் புகழ் 'ராகமாலிகா' நிகழ்வு தயாரிப்பாளர் திரு.வி. கெ. மணிமாறன், இயக்குணர் திருமதி. சுபசிறீ தணிகாசலம், தொகுப்பாளர் திரு. வேணுகோபால் பாலாஜி இவர்களுடன் பிரான்ஸ் நாட்டுக் கலைஞர் திரு. உமாபதி ஆகியோருடன் சூப்பர் ரியூன் இசைக்குழுவினரும் இணைந்து மிருதங்கம், வயலின், வாய்ப்பாட்டு, திரைப்பாட்டு போட்டிகளை சிறப்பாக நடாத்தினர்.

'ராகமாலிகா' 2010 நிகழ்வில் மூன்று கலைஞர்களுக்கு 'ஈழத்தமிழ்விழி' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மறைந்த கலைஞர் தென்னிந்தியத் திரையிசைப் பின்னணிப் பாடகியும் ஈழத்தமிழ் உணர்வுப் பாடகருமான செல்வி. சேருக்குட்டி சுவர்ணலதா அவர்களுக்கான சான்றிதழும் விருதும் திரு. நா. பாலச்சந்திரன் அவர்களால் வழங்கப்பட்டது. திருமதி. சுபசிறீ தணிகாசலம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

மறைந்த கலைஞர் நாடக, குறும்பட, திரைப்பட இயக்குணரும் நடிகருமான திரு. கீழ்கரவை பொன்னையா அவர்களுக்கான சான்றிதழும் விருதும் திரு. த. கோணேஸ்வரன் அவர்களால் வழங்கப்பட்டது. திருமதி. பொன்னையா ஜெயமலர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

வாழும் கலைஞர் நாடக, குறும்பட, திரைப்பட இயக்குனர், இசையமைப்பாளர், ஒலிப்பதிவாளர், காணொளிக்N;காப்பாளருமான திரு. குமரசாமி பரராசா அவர்களுக்கு மெடலும், சான்றிதழும் த.பு.க பணிப்பாளர் செ. சுந்தரவேல் வழங்கினார். மூத்த கலைஞர் இரகுநாதன் அவர்கள் 'ஈழத்தமிழ்விழி' நினைவுச் சின்னத்தை வழங்கி சிறப்பித்தார். இதனைப் பெற்றுக்கொண்ட திரு. பரராசா அவர்கள் ஏர்ப்புரை வழங்கி தனது மகிழ்வை வெளிப்படுத்தினார்.

ஈழத்தமிழ்விழி விருதை பெற்றுக்கொண்ட திரு. பராவை வாழ்த்தி பிரான்ஸ் கலைஞர்கள் வாழ்த்துப்பா பாடினர்.

விழாவிற்கான சிறப்பு மலரை திருமதி சுபசிறி தணிகாலம் அவர்கள் வெளியிட்டு வைக்க திரு. தங்கத்துரை, திரு. தர்மதேவன், திரு.மகேஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

வாய்ப்பாட்டு மற்றும் நுண்கலை போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ்களும், நினைவு கிண்ணங்களும், ஆதரவு நல்கிய கொடையாளிகள் மற்றும் பிரமுகர்களால் வழங்கி உற்சாகமூட்டப்பட்டார்கள். ஏனைய கலந்துகொண்ட அனைத்துப் போட்டியாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டார்கள்.

இவ்விழா சிறப்பாக நடைபெற பேபி பலூனின் அழகியலும் அருள் சோனோவின் ஒலி ஒளியும், வீடியோ பாலாவின் காணெளிப் படப்பிடிப்பும் மற்றும் போட்டோ மணியின் நிழற்படப்பிடிப்பும், இணைந்து வலுச்சேர்க்க எமது தொண்டர்கள் மற்றும் ஆர்வலர்களின் நிறைந்த பணியோடு, மலர் வடிவமைப்பை திரு.கனகசபை அரியரத்தினமும், விளம்பர வடிவமைப்பை சுஜிவனும் வழங்க அருள்மொழித்தேவன், திரு. லோகதாஸ், திரு. கொலின்ஸ் அகியோரின் அறிவிப்புடன் இந்நிகழ்வு இரவு 8.30 மணிக்கு இனிதே நிறைவுபெற்றது.

வெற்றிபெற்ற போட்டியாளர்கள் விபரம் வருமாறு.

 • கீழ்ப்பிரிவு
  வாய்ப் பாட்டு - சங்கீதம்

  1ம் இடம்
  • சகாதேவன் பானுஜா
  • சகாதேவன் சிந்துஜா

  2ம்இடம்
  • கணேசன் ஐஷhனி

  3ம்இடம்
  • சின்னத்தம்பி அக்ஷரா

வாய்ப் பாட்டு - திரையிசைப் பாடல

 • 1ம் இடம்
 • சகாதேவன் சிந்துஜா

  2ம்இடம்
 • கணேசன் ஐஷhனி

  3ம்இடம்
 • எட்வார்ட்லுயிஸ் அனோஜினி
 • சகாதேவன் பானுஜா

வயலின்

 • 1ம்இடம்
 • சிவானந்தன் சாரங்கன்

  2ம்இடம்
 • சிவானந்தராஜா ஆரபி

  3ம்இடம்
 • திலீப்குமார் திசானிகா

மத்திய பிரிவு
வாய்ப் பாட்டு - சங்கீதம்

 • 1ம்இடம
 • சிவகுணராஜா நேர்த்திகா

  2ம்இடம்
 • சிவகுணராஜா சிந்துகா

  3ம்இடம்
 • மகேஸ் பைரவி

வாய்ப் பாட்டு - திரையிசைப் பாடல்

 • 1ம்இடம்
 • சிவகுணராஜா சிந்துகா

  2ம்இடம்
 • கோகுலதாஸ் சூர்யா

  3ம்இடம்
 • சிவகுணராஜா நேர்த்திகா

வயலின்

 • 1ம்இடம்
 • விஜெயகுமார் நிதர்சன்

  2ம்இடம்
 • இராஜேந்திரன் ஷpயாமழன்

  3ம்இடம்
 • பரமேஸ்வரலிங்கம் பிரகாஷ

மேற் பிரிவு
வாய்ப் பாட்டு - சங்கீதம்

 • 1ம்இடம்
 • வேலுப்பிள்ளை மயூரி

  2ம்இடம்
 • இராசலிங்கம் றொஷhன்

  3ம்இடம்
 • பாசுப்பிரமணியம் அருண்பிரகாஷ

வாய்ப் பாட்டு - திரையிசைப் பாடல்

 • 1ம்இடம்
 • உமாகாந்தன் பைரவி
 • வேலுப்பிள்ளை மயூரி

  2ம்இடம்
 • பாசுப்பிரமணியம் அருண்பிரகாஷ

  3ம்இடம்
 • கலாதரன் கஜனவி

மிருதங்கம்

 • செல்வகுமரன் விநோசாந்த்

வயலின்

 • 1ம்இடம்
 • பரமேஸ்வரலிங்கம் பிரசாத்

  2ம்இடம்
 • அகிலன் லக்ஷpயா
 • செல்வகுமரன் பிரஷhந்த்

  3ம்இடம்
 • தயாளன் துர்க்கா

அதிமேற் பிரிவு
வாய்ப் பாட்டு திரையிசைப் பாடல்

 • 1ம்இடம்
 • ஜெயாளன் ரதி

  2ம்இடம்
 • செபஸ்தியாம்பிள்ளை சுசி

  3ம்இடம்
 • தர்மகுலசிங்கம் கௌரிமலர்

ஒன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ்