தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - பிரான்ஸ்
முதற்பக்கம்
செய்திகள்
வெண்புறா
HDU
செயற்பாடுகள்
திட்டங்கள்
காப்பகம்
அறிக்கை
கட்டுரை
நேர்காணல்
காணொளிப்படம்
நிழற்படம்
எம்மைப்பற்றி
தொடர்புக்கு
எமது முகவரி
ORT France,
26,rue du Département,
75018 Paris,
France.
Tél: 01 40 38 30 74
Fax: 01 53 26 09 77
trofr@hotmail.com

உதவிசெய்ய

Par virement bancaire
Banque : Credit Lyonnais
63bis rue Daurémont
75018 Paris
Code Banque - 30002
Code Guichet - 00408
N° Compte - 0000005584F
Clé RIB - 10

 
 
 

சொந்த காணிகளுக்குள் நுழைந்த மக்கள் தடுக்கப்பட்டனர் கிளிநொச்சி பொன்னகரில் பதற்றம்
30.08.2010 -Global tamil news

பொன்னகர் மக்கள் குடியிருப்பதற்காக இன்று மாலை தங்கள் காணிகளுக்குள் நுழைந்த பொழுது தடுத்து வெளியில் அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை உண்டாக்கியது. கடந்த சில மாதங்களாக காணிகளுக்குச் செல்ல விடாமல் இந்த மக்கள் தடுக்கப்பட்டுள்ளனர். காணிகள் வடக்கு மாகாண சபைக்கு சுவீகரிக்கப்படுகின்றன என்று கூறப்பட்டு தடுக்கப்பட்ட மக்கள் பொன்னகரிலும் கிளிநொச்சி மத்திய கல்லூரியிலும் தங்கியிருந்தனர். குறித்த மக்கள், இனியும் காத்திருக்க முடியாது என்றபடி இன்று தமது காணிகளுக்குள் சென்று குடியேறப்போகிறோம் என காணிகளுக்குள் நுழைந்தனர். காணிகளை துப்புரவு செய்து கொண்டிருந்த வேளை அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்ட காவலாளிகள் படைத்தரப்புக்கு அறிவித்ததைத் தொடர்ந்து மக்கள் காணிகளிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள்.

தமது சொந்தக் காணிகளில் தம்மை குடியிருத்துமாறு அரச அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்த பொழுதும் தமது அவலம் குறித்து யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்த மக்கள் தமது சொந்தக் காணிகளில் தம்மை குடியமர்த்தும்படி வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனல் சந்திரசிறியிடமும் மனு கையளித்தாக தெரிவித்தார்கள். அரச அதிகாரிகள் ஒருவரை ஒருவர் காட்டி தமது விடயத்தில் செயற்படுவதாக தெரிவித்தார்கள்.

மழை ஆரம்பித்துள்ள தருணத்தில் கூடாரங்களில் வாழ முடியாத நிலமை காணப்படுவதாகவும் கூடாரங்களுக்குள் பாம்புகள் முதலிய விச ஜந்துக்கள் வருவதனால் குழந்தைகளை வைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்கள். குறிப்பிடட மக்கள் தமது காணிகளில் தமக்கு புலம்பெயர்ந்த உறவு ஒருவரினால் கட்டித்தரப்பட்ட நிரந்தர சீமென்ட் வீடுகள் கூரைற்ற நிலையில் உள்ளது அதன் மேல் தரப்பலை போட்டு இருக்கப் போகிறோம் எனத் தெரிவித்தார்கள்.

அத்துடன் பல மாதங்களாக எந்த முடிவும் இல்லாமல் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் தம்மை அங்கிருந்து அகற்றி ஒதுக்குப் புறமான பாடசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன எனக் குற்றம் சாட்டினார்கள். பொன்னர் கிராமத்தில் காணியொன்றில் தங்சமடைந்துள்ள 15 குடும்பங்களும் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தஞ்சமடைந்துள்ள 15 குடும்பங்களும் இன்று தங்கள் காணிகளுக்கு செல்ல முற்பட்டார்கள்.

இந்த மக்களை மிகவும் அதிகாரத்தனமாக வெளிச்செல்லும்படியும் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் காணிகளை காவல் காக்க விட்டுள்ள காலாளிகள் தெரிவித்தாக கூறப்படுகிறது. தமது சொந்தக் காணிகளுக்குச் செல்லுவதற்கு காவலாளிகளை போட்டு தடுப்பதும் காவலளிகள் அதிகாரத்தனமாக நடப்பதும் ஏன்? ஏன மக்கள் கேள்வி எழுப்பினர். அந்த மக்களை காணிகளுக்குள் நிற்க விடாது தடுத்த படையினர் மீண்டும் தடுப்பு முகாங்களுக்கு ஏற்றி அனுப்பப்படுவீர்கள் என எச்சரித்துள்ளனர். இந்தச் சம்பவங்களை அடுத்து கொந்தளித்த பொன்னகர் கிராம மக்கள் தமது காணிகளுக்குச் செல்லுவதற்காக தொடர்ந்தும் நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக தெரிவித்தனர்.

இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபருக்கு மீண்டும் தமது இடங்களில் குடிமயர்த்தும்படி கோரிக்கை வைக்கப் போவதாக அவர்கள் தெரிவித்தார்கள். தமது காணிகளை அபகிரக்கும் நடவடிக்கையை நிறுத்தி தாம் சொந்த இடத்தில் குடியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் காணிகள் துப்புரவாக்கிய நிலையில் நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.