nra;jpfs;

இடம்பெயர்ந்தோர் குடியிருப்பு மீது விமானக் குண்டு வீச்சு
29.11.2008 தமிழர் புனர்வாழ்வுக் கழகம்

இராணுவ நடவடிக்கை காரணமாக பல்வேறு இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து தருமபுரம் கல்லாறு இராணிமைந்தன் குடியிருப்பில் இருந்த மக்கள் மீது இன்று அதிகாலை 1.55 மணியளவில் சிறிலங்கா அரசின் விமானங்கள் வீசிய குண்டுத்தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டு 19 பேர் காணமடைந்து தருமபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இக்குடியிருப்பு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. கடந்த வாரத்தில் ஏற்பட்ட கடும் மழையினால் முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்த மக்கள்மீது இக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பாராமரிக்கும் அதே நேரம் இறந்த இரு உடலங்களுக்கான இறுதிக்கிரியைக்கான ஏற்பாடுகள் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவும் வழங்கப்பட்டு வருகின்றது.

இறந்தோர் விபரம்

சிவகுமார் சுதர்சன் வயது 05
இராமன் இராமசாமி வயது 80

காயமடைந்தோர் விபரம்

01. சிவகுமார் சுதர்சினி வயது 02
02. தயானந்தம் பவித்திரன் வயது 05
03. நல்லையா மதியழகன் வயது 06
04. இராசேந்திரம் லோஜினி வயது 07
05. நல்லையா சசிக்குமார் வயது 07
06. ஆனந்தம் சித்திரா வயது 09
07. நல்லையா ஜெசிந்தன் வயது 10
08. இராசேந்திரம் தவச்செல்வி வயது 16
09. ஆனந்தன் வேலவன் வயது 18
10. நல்லையா புஸ்பவதி வயது 28
11. ஆனந்தம் கமலாதேவி வயது 37
12. இராசுப்பிள்ளை தேவன் வயது 60
13. முருகேசு இராசேந்திரம் வயது 39 இடதுகால் துண்டிக்கப்பட்டுள்ளது.
14. இராசேந்திரம் ருக்மணிதேவி வயது 35
15. இராமசாமி பழனியம்மா வயது 77 இடதுகை துண்டிக்கப்பட்டுள்ளது.
16. சிவகுமார் இராசகுமார் வயது 27
17. பெரியதம்பி சங்கரப்பிள்ளை வயது 55
18. கண்ணதாசன் அமராவதி வயது 40
19. நாகன் சண்முகன் வயது 55

<<<