வன்னியில் பசிக்கொடுமையால் பழைய உணவினை உட்கொண்ட நான்கு சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி
14-08-2008 வீரகேசரி
பழைய உணவு நஞ்சானதால் அதனை உட்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் தீவிர சிகிச்சைக்காகக் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படையினரின் தாக்குதலைத் தொடர்ந்து தட்சணாமருதமடுவில் இருந்து இடம்பெயர்ந்து பல இடங்களில் இருந்த பின்னர் தற்போது புதுமுறிப்பில் தங்கியுள்ள புவனேந்திரன் என்பவரின் பிள்ளைகளே பசிக்கொடுமை காரணமாக பழைய உணவினை உட்கொண்டதால் தீவிர சிகிச்சைக்காகக் கிளிநொச்சிப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒன்றரை வயதுடைய புவனேந்திரன் கல்கி,
நான்கு வயதுடைய புவனேந்திரன் தயானந்தராசா,
ஏழு வயதுடைய புவனேந்திரன் பவிந்தராஜா,
பன்னிரெண்டு வயதுடைய புவனேந்திரன் கோணேஸ்வரி
ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சிறுவர்களே சிகிச்சைக்காக கிளிநொச்சிப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



<<<