சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல் அச்சத்தினால் மீண்டும் இடம்பெயரும் மக்கள்!
12.08.2008 தமிழர் புனர்வாழ்வுக் கழகம்
தற்காலிக கூடாரங்களை அமைத்து கொடுப்பதில் சர்வதேச நிறுவனங்கள், அரச சார்பு நிறுவனங்களின் பின்னடிப்புக்களால் பாடசாலைகளை இடம்பெயர்ந்தோர் முகாம்களாக மாற்றவேண்டிய நிலை! கடந்த ஒருவாரத்தில் மட்டும் 12 பாடசாலைகள் இடம்பெயர்ந்தோர் முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன இதனால் மாணவர்களின் கல்வி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதல் மற்றும் நில வன்பறிப்புக் காரணமாக மன்னாரின் பல பகுதிகளிலும் இருந்து வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான், சோலை ஆகிய பகுதியில் வசித்து வந்த பெருமளவான மக்கள் .ராணுவத்தினரின் எறிகணை வீச்சு அச்சம் காரணமாக கிளிநொச்சி நோக்கி மீண்டும் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
கடந்த 08.08.2008 அன்று தொடக்கம் இப் பிரதேசங்களை அண்டியும் அக்கராயன் வைத்தியசாலையை அண்மித்த பகுதியிலும் சிறிலங்காப் படையினர் எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டவண்ணம் இருக்கின்றனர். இதனால் அச்சத்திற்குள்ளான மக்கள் மீண்டும் பாமுகாப்பான இடங்களை நோக்கி நகர்கின்றனர் .
இராணுவ நடவடிக்கையால் ஏற்கனவே இடம்பெயர்ந்து மர நிழல்களிலும் தற்காலிக குடிசைகளிலும் வசித்து வந்த மக்கள் இவ் எறிகணைத் தாக்குதலையடுத்து அல்லோல கல்லோலப்பட்டு பெரும் அவலநிலைக்குள்ளாகி மீண்டும் இடம்பெயர்ந்து வருகின்றனர். இதில் தமது உடமைகளை நகர்த்துவதில் இவர்கள் பெரும் இடர்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்நிலையில் இம் மக்களை அவர்களின் உடமைகளோடு பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்துவதில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றது. இம் மனிதாபிமானப் பணிகளில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தொண்டர்கள் அனைவரும் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு நகர்த்தப்படும் மக்களை பாடசாலைகளில் தங்கவைத்து சமைத்த உணவும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரால் வழங்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத் தக்கது.
கடந்த ஒருவாரத்தில் இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களை கீழ்வரும் பாடசாலைகளில் தமிழர் புனர்வாழ்வு கழகம் தங்கவைத்து உள’ளுர் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் பராமரித்து வருகின்றது.
இடம்பெயர்ந்த மக்களிற்கான உதவிகளை வழங்குவதில் இலங்கை அரசு பெருமளவான நிதி உதவிகளை பெற்று வருகின்றது. ஆனால் உரியகாலத்தில் நிவாரணப்பொருட்களை பாதுகாப்புகாரணங்களை காட்டி அனுப்புவதில்லை அதேநேரம் சர்வதேச நிறுவனங்களும் பாதுகாப்பினை காரணம்காட்டி இடம்பெயர்ந்த மக்களின் இடங்களிற்கு சென்று பார்வையிடுவதில்லை.
உடனடியாக 6000 குடிசைகள் போடப்படவேண்டிய தேவைகள் இருந்தபோதிலும் தற்போது 800 குடிசைகளே அமைக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் 3 நாட்கள் சமைத்த உணவு வழங்குவதற்கு பதிலாக புனர்வாழ்வு கழகத்தால் ஒரு நாள் உணவு மட்டுமே வழங்கப்படுகின்றன.
சுகாதாரம் மருத்துவம்
குடிநீர் சுகாதார பிரச்சினைகள் மருத்துவ பிரச்சினைகள் இனிவரும் காலங்களில் அதிகரிக்க வாய்ப்புக்கள் இருக்கின்றன. காரணம் உள்ளுர் வளங்கள் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் இருப்பதாலும் அரசம ற்றும் அரசாசார்பற்ற நிறுவனங்களின் வேலைத்திட்டங்கள் அரசாங்கத்தினால் மட்டுப்படத்தப்பட்டுள்ளதாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழீழ சுகாதாரசேவை திலீபன் மருத்துவசேவை தங்களாலான பணியினை மிக திறமையாக செய்துவருகின்றனர்.ஓவ்வொரு பிரதேசங்களிற்கும் நடமாடும் மருத்துவசேவைகள் நடாத்தப்படுகின்றன.
பொதுவான முகாம்களாக இருப்பதனல் தொற்று நோய்கள் பரவும் ஆபத்துக்கள் எழுந்துள்ளது. கற்பவதி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், முதியோர்கள், சிறுவர்கள் ஆகியோர் தொற்று நோய்வாய்ப்படும் நிலை காணப்படுகின்றது காரணம் இவர்களிற்கான சத்துணவு கிடைப்பனவு அரிதாகவே காணப்படுகின்றது.
குடிநீர்
இடம் பெயர்ந்த மக்களிற்கான சுத்தமான குடீநீர் கிடைப்பனவு மிக அரிதாகவே காணப்படுகின்றது. மக்கள் தங்கும் இடங்களில் புனர்வாழ்வு கழகம் 45 குடிநீர் கொள்கலங்களை அமைத்து பவுசர் மூலம் குடிநீர் விநியோகம் செய்கின்றது. ஒக்ஸ்பாம் மற்றும் நிறுவனங்களும் குடிநீர் விநியோகத்தில் பங்குபற்றுகின்றன.
ஒருநாளைக்கு ஒருவருக்கு சராசரி 15 லீ தண்ணீர் தேவை ஆனால் 5-6 லீ தண்ணீரே வளங்க்கப்படுகின்றன.
சர்வதேச செஞ்சிலுவை சங்கம், வேல்ட் விசன் நிறுவனங்கள் குடிநீர் திட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளை வழங்குகின்றன. தற்போதய எரிபொருட் செலவினால் சராசரி ஒரு பவுசர் ( 15,000 லீ குடிநீர்)
ஒருநாளைக்கு ரூபா 10,000 வரை செலவாகின்றது.
7000 குடும்பற்கள் அதாவது 36,000 மேற்பட்டு மக்களிற்கு குடிநீர் நாள்தோறும் செய்யவேண்டி இருக்கின்றது.
மலசலகூடவசதி
50,000 மேற்பட்ட மக்களிற்கு மலசலகூடவசதிகள் செய்யவேண்டிய தேவை உடனடியாக ஏற்பட்டுள்ளது. அதில் தற்காலிக மலசலகூடங்கள் அமைப்பதில் நிறுவனங்களிடையே வளப்பற்றாக்குறைகள் காரணமாக ஆமைவேகத்திலே நடைபெறுகின்றன. முழு இடம்பெயர்ந்த மக்களிற்கும் தற்காலிக மலசலகூடம் அமைப்பதில் பெரும் சிரமங்களும் காலதாமதங்களும் ஏற்படுவதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.புனர்வாழ்வு கழகத்தினால் வடிவமைக்கப்பட்ட தற்கால்க மலசல கூடங்கள் அதாவது 05 குடும்பத்திற்கு ஒரு மலசல கூடம் என்ற வகையில் அதனை அமைப்பதற்கு ரூபா 50,000 வரையில் செலவாகின்றது.
கல்வி
தொடர்ச்சியான இடப்பெயர்வு, மற்றும் பாடசாலைகளின் தற்கால்க நிறுத்தம், இருக்கின்ற பாடசாலைகள் இடம்பெயர்ந்த மக்களால் முகாம்களாக்கப்பட்டுள்ளதால் அனைத்து கல்லி செயற்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளன. காபொத உயர்தரம் மற்றும் சாதாரண தரம் படிக்கும் பிள்ளைகள் தமது கல்வியை தொடரமுடியாத நிலை அத்துடன் வரப்போகின்ற பரீட்சைகளில் எவ்வாறு தோற்றப்போகின்றார்கள் என்ற அச்சம். தொடர் விமானதாக்குதல்கள், எறிகணைதாக்குதல்களினால் உளரீதியான பாதிப்பு இவ்வாறாக கல்விநிலை பாதிக்கப்பட்டுள்ளது. 50,000 மேற்பட்ட மாணவர்களின் அடிப்படை கல்வியும்,20,000 மேற்பட்ட காபொத உயர்தர,சாதாரணதர மாணவர்களின் கல்வியும் கேள்விக்குறியாகி உள்ளன.ஒரு தற்காலிக வகுப்பறையினை உடனடியாக அமைப்பதற்கு ஒரு இலட்சம் தொகை வரையில் தேவைப்படுகின்றது.
முகாம்பராமரிப்பும் ஒருங்கிணைப்பும்
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் அனைத்து முகாம் பராமரிப்புக்களையும் ஒருங்கிணைப்பு நடவடிகடகைகளையும் செய்யவேண்டிய நிலையில் அதனை உள்ளுர் நிறுவனங்களின் உதவியுடன் செய்து வருகின்றது. இதற்காக ஒவ்வொரு பிரதேசத்திலும் இயங்குகின்ற உள்ளுர் நிறுவனங்களின் தொண்டர்கள் இணைந்து கிராமசேவகர்களுடன் செயற்படுகின்றனர்.
<<<