செய்திகள்

இடம்பெயர் முகாம்களில் 57 ஆயிரத்து 293 சிறுவர்கள் உள்ளனர்:
அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு

10.06.2009 வீரகேசரி

வட பகுதியில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களில்; 57 ஆயிரத்து 293 சிறுவர்கள் இருப்பதாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் யு.எல்.எம் ஹால்டீன் தெரிவித்துள்ளார்.

இவர்களில் ஆயிரத்தி 34 சிறுவர்கள் பெற்றோரை இழந்தவர்கள் எனவும் கூறியுள்ளார். இவர்களைத்தவிர இந்த முகாம்களில் 7 ஆயிரத்தி 894 விதவைகளும் 3 ஆயிரத்தி 100 கர்ப்பிணித்தாய்மாரும் உள்ளனர்.

அதேவேளை முகாம்களில் காயமடைந்தவர்கள் 11 ஆயிரத்தி 873 பேரும் ஊனமுற்றவர்கள் 3 ஆயிரத்தி 968 பேர் உள்ளனர். இடம்பெயர்ந்த மக்களிடையே 3 ஆயிரத்தி 689 அரச அதிகாரிகள் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

<<<