அறிவித்தல்
அன்பார்ந்த உறவுகளே! உங்களுக்கோர் அன்பு வேண்டுகோள்!
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் -பிரான்ஸ்
2010 ஆம் ஆண்டில் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள்
கட்டுரை

ஓர் ஆறுதல் வார்த்தை சொல்ல முடியுமா?
விதுல் சிவராஜா' 31-03-2010

ஆடு, மாடு, நாய், பூனை, கோழி என எந்த வளர்ப்புப் பிராணியும் இல்லாத வீடுகளை நீங்கள் ஒரு தடவை எண்ணிப் பாருங்கள். அதுவும் வன்னியில் அப்படி இருக்கிறது என்றால் எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொள்ளுங்கள்.

கிளிநொச்சி நகரம் எப்படியிருக்கிறது? ஒரு களக்காட்சி
விதுல் சிவராஜா' 14-03-2010

கிளிநொச்சி நகரத்தில் இப்போது மீண்டும் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியிருக்கியுள்ளது சனப் புழக்கம். பாழடைந்திருக்கும் அந்த நகரத்தில் மறுபடியும் சனங்கள் குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிதைவுகளும் அழிவுகளுமாக இருக்கிற நகரத்தில் 'இனி என்ன செய்வது?' என்று தெரியாது தடுமாறிக் கொண்டிருக்கும் மனிதர்களைக் கண்டேன். படையினர்களுக்கு மத்தியில் அவர்கள் தங்கள் நாளாந்தத் தேவைகளுக்காக அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

சர்வதேச விசேட தேவையுடையோர் தினம்
வீரகேசரி இணையம் 16-12-2009

உலகளாவிய ரீதியில் விசேட தேவையுடையோர் (வலது குறைந்தோர்) தொகை அதிகரித்த வண்ணமே உள்ளது. அபிவிருத்தியடைந்து வரும் எமது நாட்டை பொறுத்தவரையில் இவர்களின் விகிதாசாரம் அதிகமாகவே காணப்படுகின்றது. இதற்கு யுத்தம், வீதி விபத்துகள், வறுமை, போஷாக்கின்மை, வன்முறை, இரத்த உறவு திருமணங்கள் போன்றவற்றைக் காரணமாகக் கூறலாம்.

வெள்ளைப் பிரம்பு

வெள்ளை நிறக்கோலைக் கையில் தாங்கி வீதிகளில் செல்பவர்களை உங்களில் பலர் கண்டிருப்பீர்கள். ஆனால் அந்த நபர் பற்றியோ அல்லது அந்தக் கோலைப்பற்றியோ நீங்கள் சிந்தித்திருக்கமாட்டீர்கள். அத்தகைய கோலைத் தாங்கிச் செல்பவர் ஒரு கண்பார்வையற்றவர்.