தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - பிரான்ஸ்
முதற்பக்கம்
செய்திகள்
வெண்புறா
HDU
செயற்பாடுகள்
திட்டங்கள்
காப்பகம்
அறிக்கை
கட்டுரை
நேர்காணல்
காணொளிப்படம்
நிழற்படம்
எம்மைப்பற்றி
தொடர்புக்கு
எமது முகவரி
ORT France,
84 ,rue philippe de Girad,
75018 Paris, France.
Tél: 01 40 38 30 74
trofr@hotmail.com

உதவிசெய்ய

Par virement bancaire
Banque : Credit Lyonnais
63bis rue Daurémont
75018 Paris
Code Banque - 30002
Code Guichet - 00408
N° Compte - 0000005584F
Clé RIB - 10

 
 
 

மனிதநேய சேவையாளர் மருத்துவர் திரு.நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களுக்கான கண்ணீர் அஞ்சலியும், நினைவுரைக்கூட்டமும் 03.03.2013 பிரான்சின்ல் நடைபெற்றது.

தமிழ் மக்களின் சுதந்திரப்போராட்டத்திற்கும், பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கும் அளப்பெரிய பணிசெய்த மருத்துவர் திரு.நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்கள் 27.02.2013 அன்று சுகயீனம் காரணமாக பிரித்தானியா (குரோய்டன்) மருத்துவமனையில் சாவடைந்தார்.

அந்த மகத்தான மனிதனுக்கான நினைவு வணக்க நிகழ்வு பாரிஸ் பனியோலே மண்டபத்தில் மாலை 4.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. பிரதான பொதுச்சுடரினை தமிழர் புனர்வாழ்வுக்கழக பிரான்ஸ் தலைவர் திரு.த.கோணோஸ்வரன் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத்தொடர்ந்து மருத்துவர் திரு.நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் திருவுருவப்படத்திற்கு அவரது இரத்த உறவான திமதி. யசோ பிறேமரமணன் அவர்கள் விளக்கேற்றி மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார்.

மாவீரர்களையும் போரினாலும் இயர்க்கை அனர்த்தங்களாலும் சாவடைந்த மக்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. வணக்க நிகழ்விற்கு வருகைதந்த ஒருங்கிணைப்புக்குழு பிரதிநிதிகள், நாடுகடந்த தமிழீழ அரச பிரதிநிதிகள் முதன்மைச்சுடர்களை ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினர் அதனைத்தொடர்ந்து தமிழர் புனர்வாழ்வுக்கழக உறுப்பினர்கள், தமிழ்தேசிய செற்பாட்டாளர்கள், தமிழ்சங்க பிரதிநிதிகள், வர்த்தகர்கள், கலைஞர்கள், வானொலி, தொலைக்காட்சி பிரதிநிதிகள் மற்றும் வருகை தந்த உணர்வாளர்கள் அனைவரும் நெஞ்சுருகி சுடரேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தினர்.

கிராமிய உணர்ச்சிப்பாடகர் மைலையூர் இந்திரன் அவர்கள் மனிதநேய சேவையாளர் மருத்துவர் திரு.நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் சேவைகளை போற்றி இரு பாடல்களை பாடினார். கவிஞரும், நடுவக பிரதிநிதியுமான திரு.ஜெயா அவர்கள் மருத்துவரின் திறமைகளையும் சேவைகளையும் கவிதையாய் நெஞ்சுருகப்பாடினார்.

தமிழகத்தில் இருந்து வருகைதந்த பிரபல இசையமைப்பாளரும், இயக்குணரும், பாடகருமான திரு.கங்கை அமரன், ரான்சி நகரமன்ற உறுப்பினரும், உலகத்தமிழர் பண்பாட்டு இயக்க பிரான்ஸ் தலைவருமான திரு. அலன் ஆனந்தன், தமிழர் புனர்வாழ்வுக்கழக பிரான்ஸ் பணிப்பாளர் திரு.சுந்தரவேல், கௌரவ உறுப்பினர் திரு.விநாயகமூர்த்தி, நாடுகடந்த தமிழீழ அரச பிரதிநிதிகளான திரு.பாலச்சந்திரன், திரு.சுதன்ராஜ், திரு. கொலின் ஆகியோருடன் திரு. மைந்தன் பிரெஞ்சு மொழியிலும் நினைவுரைகளை வழங்கினர். நிகழ்ச்சி தொகுப்பினை பிரபல வானொலித்தொகுப்பாளர் எஸ். கே.ராஜன் தொகுத்து வழங்கினார். நினைவு வணக்க நிகழ்வு 7.30 மணிக்கு நிறைவு பெற்றது.

ஓன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ்